எதிர்பார்ப்புகள் Phoenix, Arizona, USA 54-0228A 1சகோதரன் பல்லார்ட் (Ballard) உமக்கு நன்றி. மாலை வணக்கம் நண்பர்களே. இந்த மதிய வேளையில் இங்கே பீனிக்ஸில், (Phoenix) இந்த வெப்பமான பள்ளத்தாக்கில், குமாரனைக் குறித்து (கு-மா-ர-ன் இயேசு கிறிஸ்து) பிரசங்கிப்பது என்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சிலாக்கியமாய் இருக்கிறது. நான் உங்களை கடந்த முறை சந்தித்ததிலிருந்து, அது தாமே நீண்ட கால காத்திருக்குதலாயிருக்கிறது. ஏனெனில் நான் கடல் கடந்து, சமுத்திரத்தினூடாக அநேக இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். தேவன் தாமே அங்கே அநேக பெரிய காரியங்களைச் செய்தார். ஓ, அதைக் குறித்துப் பேச இங்கே நமக்கு ஒரு குட்டி நித்தியம் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். அவர் அங்கே வெளியே செய்த அதே காரியத்தையும் மற்றும் இங்கே இதற்கு முன்பு செய்த அதே காரியத்தையும், திரும்பவும் அதை இங்கே செய்யும்படிக்கும் மற்றும் கர்த்தருடன் கூட ஒரு மகத்தான நேரம் இங்கே பீனிக்ஸில் உண்டாயிருக்கும்படிக்கும் எதிர்பார்த்து நாங்கள் வர இருந்தோம். 2இந்த மாதம் நான் இந்தியாவில் இருக்கவேண்டும், ஆனால் கர்த்தரிடத்தில் இருந்து வந்த வெளிப்பாடு அல்லது தரிசனத்தில், அவர் என்னை செப்டம்பர் மாதம் அங்கு போகும்படி கூறினார். ஆகஸ்டு மாத பாதிக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் எனக்கு இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள் மற்றும் இங்கிருக்கிற சகோதரர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தனர். கடிதமும் கூட எழுதினார்கள். எனவே நானும் அவர்களைத் திரும்ப தொலைபேசியில் அழைத்து நமக்கு இன்னும் போதுமான நேரம் இருக்கிறது என்றேன். எனவே அவர்கள் அதை அவ்விதமே திட்டம் பண்ணினார்கள். இங்கேயிருக்கிற இந்த அருமையான கூட்ட மக்களையும் மற்றும் இந்த மேடையின் மேல் வீற்றிருக்கும் இந்த அருமையான கூட்ட புருஷர்களையும் காணும்படிக்கு இங்கே இருப்பதில் நாங்கள் சந்தோஷமடைகிறோம். என்னிடத்தில் கொடுக்கப்பட்ட காகிதத்தில் அவர்களுடைய பெயர்களை கவனித்த போது அவர்களில் அநேகர் என்னுடன் ஒத்துழைக்கக் கூடிய மேய்ப்பர்களாவர். மற்றும் நம்முடன் இருக்கிற மற்றவர்களையும் இன்னும் யாவரையும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துவதில் நாங்கள் மிக, மிக சந்தோஷப்படுகிறோம். நான் பீனிக்ஸி-க்கு சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அது எங்கும் அழகாயிருக்கிறது. இந்த பாலைவனம் இப்பொழுது துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அங்கே என்னுடைய மாநிலத்தில் மிகவும் குளிராக இருக்கிறது. 3கடந்த இரவு நான் தங்கியிருக்கும் அவ்விடத்தில் அவர்கள், “உங்களுக்கு குளிராக இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அவர்களிடத்தில் மெத்தை உறைகளும், கம்பள போர்வைகளும் இருந்தன. என்னோடு கூட என் சிறிய பெண்கள் இரண்டு எஸ்கிமோக்கள் (பனிப் பிரதேசத்தில் வாழ்பவர்) வந்திருந்தார்கள். நான், “ஆம், எங்களுக்கு மூச்சுதிணறுவது போல் இருக்கிறது. நாங்கள் ஜன்னல்களை எல்லாம் திறந்துவிட்டு, படுக்கைமேல் இருந்த எல்லா மெத்தை உறைகளையும் எடுத்துவிட்டோம்”. “அங்கே வடக்கில் சற்று குளிராக இருக்கிறது, ஆனால் இங்கேயோ நாங்கள் கோடைகால மத்தியில் இருப்பதைப் போல் உணருகிறோம்”, என்றேன். கடந்த இரவு அவர்களுக்கு மிகவும் குளிரான இரவு இருந்தது என்றார்கள், ஆனால் நான், “என்னது” என்று நினைத்துக் கொண்டேன். நிச்சயமாக நீங்கள் அங்கு வடக்கு பகுதிக்கு வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நான் அஞ்சுகிறேன், ஏனெனில் நீங்கள் அப்படி அங்கு வரும்பட்சத்தில் குளிரை சமாளிக்கக் கூடிய ஆடைகளை நீங்கள் அணிந்து வரவேண்டும். காரணம் அங்கே குளிராக இருக்கிறது. அங்கே எங்கள் பகுதியில் இன்றைக்கு நான்கு அங்குலத்திற்கு பனி பொழிந்திருக்கிறது என்று சற்று முன்னர்தான் கேள்விப்பட்டேன். எனவே காரியம் அங்கு நிச்சயமாக வித்தியாசமாயிருக்கும். நாம் இந்த பிற்பகல் வேளையில் இந்த அழகான சூரியன் பிரகாசிக்கிற இடத்தில் இருக்கும்போது அவர்களெல்லாரும் இங்கே இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். 4இருப்பினும், ஜீவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய ஆத்துமாக்களில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் நாம் அவருக்குள்ளாக இந்த நித்திய நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம் என்பதுமே முக்கியமான காரியமாயிருக்கிறது. இப்பொழுது அடுத்து தொடர்ந்து வருகிற எட்டு நாட்கள் கூட்டங்களில் நாம் அவருடைய பிரசன்னத்தினால் நிரப்பப்பட்டு இருக்க விரும்புகிறோம். அவர் இங்கே இருக்கவேண்டும் என்று நாம் விரும்புவதைக் காட்டிலும் அதற்கு அதிகமாக அவர் நமக்குச் செய்ய விரும்புகிறார். நாம் வரும் நாட்களில்ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பதை, நாம் விரும்புவதைக் காட்டிலும், அதிகமாய் நாம் ஆசீர்வதிக்கப்படுட்டிருப்பதைக் காண அவர் வாஞ்சையாயிருக்கிறார். இப்பொழுது நாம் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பதைத் தடுக்கின்ற ஒரு காரியம் இருக்குமானால்; அது நாமாகத்தான் இருக்கும். அது தாமே தண்ணீர் வருகின்ற வழியை அடைத்துப் போட்டிருக்கிறது, அது அப்படியில்லையா? எனவே அது தண்ணீரை வேறு எங்கேயோ திசை திருப்பிவிடுகிறது. நாம் மட்டும் தேவனுடைய வழியில் வருவோமானால்... எனவே, நாம் நம்முடைய வழியைவிட்டு விலகி, நம்மை வெறுமையாக்கி; அவரிடத்தில், “இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்குள்ளே வந்து, காரியத்தை உம்முடைய கட்டுக்குள்ளாக எடுத்துக் கொள்ளும்”, என்று கூறுவோமாக. அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை நம்மால் பார்க்கமுடியும். அதற்குப் பின் நாம் கேட்டுக் கொண்டதைக் காட்டிலும் அல்லது நினைப்பதைக் காட்டிலும் நிறைவாகவும், மிக அதிகமாகவும் நாம் பெற்றுக்கொள்வோம். ஆம் ஐயா. அவ்விதமாக தேவன் நமக்கு அதை தந்தருள்வார். 5அயல் நாடுகளில் தேவன் செய்த அநேகக் காரியங்களை நான் சொல்லவேண்டும். அதைக் கொஞ்சநேரம் கழித்து ஆராதனைகளில் கூறுவேன். அங்கே காரியங்களை தேவன் தாமே எப்படியாக ஆசீர்வதித்தார் என்றும் நடக்கப்போகின்ற பெரிய கூட்டங்களைப் பற்றி தரிசனத்தில் காண்பிக்கப்பட்டதை இங்கே இந்த வேதாகமத்தில் அதை எழுதி வைத்திருக்கிறேன். எனவே நீங்கள் ஒரு துண்டு காகிதத்தை கொண்டு வந்து, அதை எழுதிக் கொள்ளுங்கள், அதற்குப் பின் அது அவர் கூறினபடி ஒவ்வொரு வார்த்தையாக நிறைவேறுகிறதா? இல்லையாவென்று நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாகவே அது அருமையான, மிக அருமையான காரியமாய் இருக்கப்போகிறது. மேலும் மகத்தான நாட்கள் நமக்கு முன்னாக இருக்கிறது. இருப்பதிலேயே மகத்தான நாள் ஒன்று இருக்கும் என்று நாம் சிந்திப்போமானால், அது நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடிய எடுத்துக் கொள்ளப்படும் நாள் (Rapture) ஆகும். அது ஒரு அருமையான நாளாக இருக்காதா? என்னே‚ ஒரு வியாதியஸ்தர் ஜெபிக்கப்பட வேண்டும் என்ற ஒரு காரியமோ அல்லது பாவிகளுக்கு பிரசங்கம் பண்ணவேண்டும் என்ற ஒரு காரியமோ நமக்கு இருக்காது. அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும் நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். நான் அங்கே இருப்பேன் என்ற திட நிச்சயம் எனக்கு இருக்கிறது. உங்களுக்கு அப்படி இல்லையா? ஆம் ஐயா. 6நல்லது, அது சரிதான். அது திட நிச்சயம் (Assurance) அல்லது காப்பீடு (Insurance), இரண்டில் ஏதோ ஒன்று என்று நான் யூகிக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன் என்னிடத்தில் ஒரு காப்பீடு முகவர் வந்து, “பில்லி, உங்களுக்கு சில காப்பீடுகளை விற்கலாம் என்று நான் விரும்புகிறேன்”, என்றார். நான், “ஓ, என்னிடத்தில் நிறைய காப்பீடுகள் இருக்கிறது”, என்றேன். அவர், “எந்தக் கம்பெனி காப்பீடு நீங்கள் வைத்திருக்கிறீர்கள்”, என்றார். நான், “நல்லது, அது இயேசுகிறிஸ்து”, என்றேன். அதற்கு அவர், “ஓ, இப்பொழுது, அதெல்லாம் சரிதான்”, என்றார். நான், “நல்லது, அதுதாமே ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியும், இயேசு எனக்கு சொந்தமானவர் என்றும், ஓ, தெய்வீக மகிமையின், எவ்விதமான ஒரு முன் ருசி பார்த்தலாயிருக்கிறது” என்றேன். அவன், “அதெல்லாம் சரிதான், பில்லி. ஆனால் அது இங்கிருக்கும் கல்லறையில் உன்னை கொண்டுபோய் சேர்க்காது”, என்றான். நான், “அது எனக்குத் தெரியும். ஆனால் அது என்னை அதிலிருந்து வெளியே கொண்டு வரும். அங்கே போவதைக் குறித்து நான் கவலைப்படவில்லை”, என்றேன். அங்கே போவதைக் குறித்து நான் கவலைப்படவில்லை ஆனால் அங்கிருந்து வெளிவரவேண்டும். அது சரிதானே? என்றேன். 7பவுல் ஏற்கனவே கூறினவிதம், “நான் அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அறிந்திருக்கிறேன், என்று உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன். என்னை அவர் மரித்தோர் மத்தியிலிருந்து அழைக்கும் போது, அதிலிருந்து வெளியே வரவே விரும்புகிறேன். நம் ஒவ்வொருவருக்கும் முன்பாக ஒரு பெரிய வாசல் அல்லது இருண்ட பாதையானது வைக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய இருதயம் ஒவ்வொரு முறையும் துடிக்கும் போது, நாம் அதற்கு சற்று நெருங்கிப் போகிறோம். ஆனால் ஒரு காரியம் உண்டு: நாம் அங்கே போனபின், நாம் ஒரு கோழையைப் போல உள்ளே போகப் போவதில்லை. என்னுடைய நேரம் வரும்போது, அவருடைய நீதியின் வஸ்திரத்தினால் என்னை மூடிக்கொண்டு, “அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்திருக்கிறேன்”, என்று அறிந்தவனாய் அங்கே உள்ளே போக விரும்புகிறேன். எனவே பவுல் மரிக்கும் போது, “ஓ, மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே?” என்று கூறினதில் ஆச்சரியமொன்றுமில்லை. அவர், 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்', என்றான். ஓ, அப்படிப்பட்ட நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்குள்ளாகவும் நிலைத்திருக்கிறது. அந்நாளில் வயதானவர்கள் யாவரும் திரும்பவும் வாலவயதை அடைந்து மற்றும் குழந்தைகளும் வாலிப வயதை பெற்றிருப்பது... அது அருமையாயிருக்காதா? இருதய வலியும், துக்கமும், எந்தவொன்றும் அங்கிருக்காது. தேவனுக்கே நன்றி உண்டாவதாக 8இப்பொழுது, இவ்வாரத்தில் நீங்கள் அதிகமாய் எங்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் சபைக்கு மேய்ப்பனாய் இருக்கும் போது இந்த ஒரு சிறிய, கொண்டாட்டப் பாடலைப் பாடுவது வழக்கம். அது, ஜெபியுங்கள், ஜெபியுங்கள்... அந்த ஒரு வழியில் மாத்திரம் உன்னத நிலையை அடையமுடியும், எனவே ஜெபியுங்கள், ஜெபியுங்கள், விசுவாசமுள்ள ஜெபத்தை ஏறெடுங்கள், அது தேவனுடைய ஆசீர்வாதங்களை கீழே கொண்டு வரும். அது சரிதான். அது அப்படியில்லையா? தேவனுடைய ஆசீர்வாதங்களை கீழே கொண்டு வருவதற்கு விசுவாசமுள்ள ஜெபம் அவசியமாயிருக்கிறது. 9எனவே, ஒரு சில வாரங்களுக்கு... அது மூன்று வாரங்களுக்கு முன்னர் நாங்கள் சிக்காகோவிலிருந்து துவங்கினோம். சிக்காகோவிலிருந்து நேராக புறப்பட்டு வுட் ரிவர் (Wood River) வந்து, வுட் ரிவரில் ஒரு இரவு கழித்து ஹாட் ஸ்பிரிங்ஸ் வந்தடைந்தோம். அதற்கு அடுத்த இரவு ஷீவர்போர்ட் சென்று, அங்கிருந்து இரண்டு இரவுகள் கழித்து இங்கு வந்து சேர்ந்தோம். இப்பொழுது இங்கு தொடங்கி எட்டு நாட்கள் கழித்து நேராக ஓஹய்யோவிலிருக்கும் கொலம்பஸக்கு சென்று அங்கு கிட்டத்தட்ட நானூறு மேய்ப்பர்களால், ஒரு பெரிய தீரச் செயல் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெரிய கூட்டத்திற்குப் போகிறோம். பிறகு அங்கிருந்து திரும்பவும் கெண்டக்கியிலிருக்கும் லூயிவில்லிற்குச் சென்று, மறுபடியும் அயோவாவிலிருக்கும் (Iowa) டேஸ் மொயின்ஸ் சென்று, அங்கிருந்து கனடா மட்டும் போகிறோம். அதன்பின் அங்கிருந்து நியுயார்க் சென்று, அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவிலிருக்கும், டர்பனுக்கும், இந்தியாவிலிருக்கும் பம்பாய், கல்கத்தா பின்னர் பாலஸ்தீனா, லக்ம்பர்க், ஃப்ரங்கபர்ட், பாரீஸ், லண்டன் சென்று அதன்பின் வீடு திரும்புகிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்காக தொடர்ந்து பயணம் செய்கிறோம். எனவே, அடுத்து இயேசு கிறிஸ்துவின் மகத்தான திட்டத்திற்காகவும், உலகம் முழுவதுமுள்ள முழு சுவிசேஷ சபைகளிடத்தில் ஏறெடுக்கப் போகிற பயணத்தில், கர்த்தர் தாமே அரை மில்லியன் (ஐந்து லட்சம்) ஆத்துமாக்களைக் கொடுப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 10தேவன் அதைச் செய்வார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அதை அவர் செய்வார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நான் தவறாக எண்ணவிலையென்றால், இங்கு உட்கார்ந்திருப்பது சகோதரி. வால்ட்ராப் என்று நினைக்கிறேன். நான் நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை. என்னால் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய மக்கள் இங்கே இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் உங்களை அடையாளம் கண்டுகொண்டேன் என்று நினைக்கிறேன். சகோதரி வால்டராப், நான் முதன் முதலில் ஃபீனிக்ஸ் (Phoenix) வந்தபோது நீங்கள் அதிகமாக வியாதியுற்றிருந்தீர்கள். அங்கே அவள் கிடத்தப்பட்டு இருந்ததை நினைவு கூறுகிறேன். யாரோ ஒருவர் கட்டிடத்தில் மரித்துக் கிடக்கிறார் என்று என்னிடத்தில் வந்து கூறினார்கள். அது அங்கிருக்கும் ஒரு சிறிய ஸ்பானிய சபை (Spanish Church) என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், அது கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்தது என்று நினைக்கிறேன். எப்படியோ, சகோதரி வால்டராப், அது ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னர் என்று யூகிக்கிறேன். பார்ப்பதற்கு அவள் அசல் பிணமாக அங்கே படுத்துக் கிடந்தாள், அப்படி அவள் இல்லையா? ஆம் ஐயா. அவளுடைய சரீரத்தின் நிலை உயிர் எப்போது போகுமோ‚ என்ற விதமாக இருந்தது. அது சரிதானே? 11இங்கு உட்கார்ந்திருப்பது சகோதரன். அவுட்லா தானே (Brother Outlaw) அது சரியாக சகோதரன் மற்றும் சகோதரி அவுட்லா வசிக்கும் தெருவுக்கு அப்பால் நிகழ்ந்தது என்று நான் விசுவாசிக்கிறேன். ஆம் ஐயா. சரி, அது நல்லது. உங்களுடைய பாடல் பதிவுகளில் ஒன்று என்னிடத்தில் இருக்கிறது. “பரலோகம் (Heaven),” என்ற பாடல், நீங்களும் உங்கள் மனைவியும் பாடினது என்னிடத்திலிருக்கிறது. உங்களுடைய சபையில் இருக்கும் யாரோ ஒருவர் அல்லது உங்கள் குடும்பத்தினர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட ஒரு சிறிய காந்த ஒலிநாடா என்று நான் விசுவாசிக்கிறேன். அதை எல்லா நேரங்களிலும் நான் போட்டுக் கேட்பேன். உண்மையிலேயே நான் தனிமையாய் இருக்கும்போது சில நல்ல அருமையான பழைய பெந்தேகொஸ்தே இசையை ஒலிக்கச் செய்வேன். 12அநேக காரியம் இருக்கிறது, இருப்பினும் ஒரு காரியத்திற்கு, பெந்தேகொஸ்தே மக்களுக்காக நாம் புகழாரம் சூட்டவேண்டும். அந்த ஒரு காரியம் என்னவெனில், அது அந்த அருமையான நல்ல பழைய பாணியிலான பாடல்கள். அது படிப்படியாக நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது பரிணாமத்திற்கு, எங்கேயோ, அதென்னவெனில் எங்கே தேவன் வாசம் செய்கிறாரோ அங்கே அவ்விடத்திற்கு அது கொண்டு செல்கிறது. இங்கே இந்த சபையில் எனக்கு அறிமுகமான நபர்களை நான் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆம், அதற்காக என்னை மன்னியுங்கள். ஏனெனில் நான் அவர்களின் முகங்களை அடையாளம் கண்டு பிடிப்பதில் அவ்வளவு தேர்ந்தவன் கிடையாது. ஆனால் நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன். மற்றும் தேவன் உங்களை ஆசீர்வதித்து, செழிப்படையச் செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் என்னையும் அப்படிச் செய்திருக்கிறார். அதற்காக நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். சென்ற முறை கடைசியாக நான் உங்களைப் பார்த்ததிலிருந்து, நிச்சயமாக, என்னுடைய தொல்லை என்னவென்று நீங்கள் அறிவீர்கள். தரிசனத்தின் கீழாக, ஜெப வரிசையில் நீண்ட நேரம் தரித்திருக்க வேண்டியதாயிருந்தது. எனவே அதற்குப் பிறகு எட்டு மாதங்களுக்கு நான் விடுப்பில் இருந்தேன். கர்த்தராகிய இயேசு என்னை சுகப்படுத்தினார். நானும் ஏறக்குறைய நூற்றிருபத்தெட்டு பவுண்டுகள் எடையிலிருந்து கூடாமல் இருந்தேன், அது எனக்கு உகந்த எடை என்று நினைக்கிறேன். இப்பொழுது நான் நூற்று அறுபது பவுண்டு எடை (ஏறக்குறைய எண்பது கிலோ) இருக்கிறேன். நான் கொஞ்சம் எடை கூடியிருக்கிறேன். 13நல்லது, நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன் மற்றும் நான் கூட்டங்களைச் சற்று கூர்ந்து கவனித்த போது, அது எதிர்பார்த்த வகையில் அமையாமல், மிகவும் கடினமாக இருந்தது. முழு பாரத்தையும் என் மேலாகவே போட்டுக் கொண்டது போல நான் உணர்ந்தேன். ஆனால் தேவனோ மற்றவர்கள் கூட்டங்களை சரியாக அமைக்கும் படிக்கு செய்ததைக் கண்டு பிடித்தேன். அவர்கள் எப்பொழுதும் அவ்விதமே செய்து வந்தார்கள். ஆனால் நாமோ சில சமயங்களில் மிகவும் துரிதப்பட்டு அந்தக் காரியத்தில் தவறு செய்து விடுகிறோம். இப்பொழுது, இங்கிருக்கும் இந்த சகோதரன். பல்லர்ட்வுடன் பேசிக் கொண்டிருந்தேன். கூட்ட பொறுப்பு குழுவில் (Committee) அவர் ஒரு நபராயிருக்கிறார். அவர் கூட்ட ஏற்பாடுகளை செய்யும் விதம் எனக்குப் பிடிக்கும். அவர் சபை பாகுபாடின்றி எல்லோரையும் அழைப்பதை நான் விரும்புவேன். அது யாக்கோபு மூன்றாவது துரவைத் தோண்டி, “இங்கு எல்லோருக்கும் இடம் இருக்கிறது” என்று கூறினது போல இருக்கிறது. அது மிகவும் அருமையாயிருக்கிறது. அவ்விதமே இருக்கட்டும். ஆகவே, அவர் அவ்விதமானவரே... 14நீங்கள் உங்கள் அக்கம் பக்கத்தினர்களை கூட்டத்திற்கு வரும்படி அழைப்புக் கொடுக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நான் சகோதரன் ஷூலர் (Brother Schuller) அழைத்து, இங்கே நான் அவருக்குப் போட்டியாளனாக வரவில்லை என்று கூறப்போகிறேன். இங்கே இந்த பட்டணத்தில் ஒரு கூட்டமானது அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை, நான் இங்கே வரும் வரைக்கும் அறியாமலிருந்தேன். அவருக்கு இரண்டு வாரம் கூட்டங்கள் இருந்தது என்பதை நான் அறிந்துகொண்டேன், அவரும் அதைக் கூறியிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதன் பிறகு அவர் தொடர்ந்து மூன்றாவது வாரமும் இங்கே தரித்திருந்தார். ஒருவேளை நான் இங்கே வருவதை அந்த நேரத்தில் அவர் அறியாமலிருந்திருக்கலாம். எனவே நாம் இங்கே ஒருவருக்கொருவர் போட்டியாளனாக இருக்கப்போவதில்லை. நாம் இங்கே மக்களுக்கு தேவனுடைய ஊழியக்காரர்களாய் இருக்கிறோம்.அது சரிதான். எனவே சகோதரன் ஷூலர் அவ்விதமாகவே எண்ணுகிறார் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அவரை நான் இதுவரை சந்தித்ததில்லை. என்னுடைய தாயார் கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் அவரைச் சந்தித்திருக்கிறார். அவர் ஒரு அருமையான கிறிஸ்தவ சகோதரன். எனவே அவருக்கு அருமையான கூட்டம் இருக்கிறதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 15எனவே சகோதரன் ராபர்ட்ஸ் இப்பொழுது தான் பண்ணிரென்டாயிரம் மக்கள் குழுமின கூட்டத்தை நடத்திச் சென்றிருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள். சகோதரன் ஷூலர் மூவாயிரம் மக்கள் குழுமின கூட்டத்தைக் கூட்டியிருக்கலாம் என்று கூறினார்கள், ஒரு வேளை நாம் ஆயிரம் அல்லது ஆயிரத்தைநூறு கூடும் கூட்டத்தை கூட்டலாம். எனவே பாவிகளையும், வியாதியஸ்தர்களையும் மற்றும் துன்பப்படுபவர்களையும் இங்கே கொண்டு வருவதற்கு போதுமான இடம் இருக்கிறது, அப்படியில்லையா? அவர்கள் எவ்விடத்திலும் இருக்கிறார்கள். இப்பள்ளத்தாக்கின் இப்பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் ஒலிக்கக்கூடிய அளவிற்கு பண்டைய பாணியிலான கூட்டத்தை, தேவனுடைய மகிமைக்காக நாம் பெற்றுக் கொள்வோமாக. அது சரிதான். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தாமே அவருடைய மாட்சிமை நிறைந்த பிரசன்னத்தை கொண்டு கீழ் இறங்கி, இந்த முழு பள்ளத்தாக்கையும் ஆசீர்வதித்து, ஒவ்வொரு கள்ளச்சாராய சந்தையையும் மூடி ஓ, இந்த எல்லா களியாட்டக் குழாம்களையும், பாவத்தையும் நீக்கி பழைய பாணியிலான ஜெபக் கூட்டங்கள் கொண்ட பட்டணமாக இந்த முழு பட்டணத்தையும் மாற்றி, எவ்விடத்திலும் தேவனுடைய மகிமை விளங்கும்படி செய்வாராக. 16நாம் சிறைச் சாலைக்குப் போக வேண்டியதாய் இருந்து, அது அவ்விதமாய் நிகழுமானால் அது ஒரு நல்ல காரியமாகத்தான் இருக்கும், அது அப்படி இருக்காதா? பவுலுக்கும், சீலாவுக்கும் நிகழ்ந்தது போல நமக்கு இன்னும் அவ்விதமான பழைய பாணியிலான கூட்டங்கள் மறுபடியும் அவசியமாயிருக்கிறது. ஒரு இரவு அவர்களைச் சிறைச்சாலையில் அடைத்து வைத்தார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்.அங்கே, அவர்கள் ஒரு குறிசொல்லுபவளிடத்திலிருந்து ஒரு சிறிய பழைய பொல்லாத ஆவியை துரத்திவிட்டதினிமித்தம், அவர்கள் அவனை சிறைச்சாலையில் அடைத்தனர். அவர்களோ சிறைச்சாலை சுவர்கள் கீழே விழும் வரைக்கும் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அது மிகவும் அருமையாயிருக்கிறது, அப்படியில்லையா? அவர்கள் அங்கே... எபேசுவுக்கு சென்று, பரிசுத்த ஆவியின் தேவையிலிருக்கும் ஒரு கூட்ட பாப்டிஸ்ட் மக்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு, அங்கே அவர்களுக்கு ஒரு குதூகலமான நேரம் உண்டாயிருந்தது. நாம் அதை பெற்றுக் கொள்ளும்படிக்கு எபேசுவுக்கு போக வேண்டிய அவசியமில்லை, நாம் அங்கே போக வேண்டுமா? நாம் அதை ஃபினிக்ஸிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அப்படி நினைக்கவில்லையா? எனவே நீங்களும் ஜெபியுங்கள், நானும் ஜெபிக்கிறேன், தேவனுடைய மகிமைக்காக நம்மால் முடிந்த சிறப்பானதை இந்த வாரத்தில் நாம் செய்வோம். 17நான் அவரை அழைத்தபோது, அந்த சகோதரன் என்னிடத்தில் கூறினதாவது... வழக்கமாக கூட்டங்களில்... மேலாளர்களாக உள்ள யாராகிலும் பிரசங்கிக்கும்படி கொடுக்கப்படும் போது, நான்... சகோதரன் பாக்ஸ்டர் அல்லது சகோதரன் பாஸ்வர்த்... பெரும்பாலும் நம்முடைய ஆராதனைகள், சுகமளிக்கும் ஆராதனைகளாக இருக்கும். ஆகவே, நாம்... அந்த சமயத்தில் திரு. பாக்ஸ்டர் கனடாவில் இருந்தார். திரு. பாஸ்வர்த் ஃப்ளாரிடாவில் இருந்தார். அவர்கள் அயல்நாடு கூட்டங்கள் இன்னும் மற்ற காரியங்களை ஒழுங்கு செய்து வந்தார்கள். என்னுடைய உடன் வேலையாளான என் மகன் திரு. வில்லியம் பால் பிரான்ஹாம் சுவிசேஷ பணியினிமித்தம் என்னுடன் இணைத்து நாங்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்கிறோம். அவனை பிரசங்கம் பண்ணும்படிக்கு தேவன் அழைக்கவில்லையென்றாலும், இருப்பினும் இந்த கூட்டங்களில் அவனுடைய தகப்பனார் சிறப்பானதை செய்யும்படிக்கு அவன் முற்படுகிறான். ஆகவே, கூட்டங்களைக் கொண்டிருக்கும்படி.... 18எனவே, நாங்கள் இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்யும்போது, அதை வெறுமனெ சுவிசேஷ கூட்டங்களாக மட்டுமே ஒழுங்குப்படுத்தும்படிக்கு சகோதரர்களிடத்தில் கூறினோம். அவ்விதமான கூட்டத்தில் ஒன்றோ அல்லது இருமுறையோ பங்கு கொண்டு, வெறுமனெ பிரசங்க ஆராதனைகளை மட்டுமே ஒவ்வொரு நாளும் மதியம் இரண்டு மணிக்கு நடத்தினோம். பின்னர் ஒவ்வொரு மாலை ஏழரை அல்லது எட்டு மணிக்கு, ஆம், நாங்கள் வந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து; வியாதியஸ்தர்களுக்காக; காரணம் அவர்கள் கூட்டத்துக்கு வந்ததினிமித்தம், முழு கூட்டத்தாருக்கும் ஜெபிக்கும் ஜெபத்தை மக்களுக்கு ஏறெடுத்தோம். பாவிகளை மனம்திரும்புதலுக்கும், பரிசுத்த ஆவி இல்லாதவர்களை மறுபடியும் பிறத்தலுக்கு வரும்படிக்கும் அழைப்பது மிகவும் வெற்றிகரமாக இருப்பதை தேசத்தின் பல பாகங்களில் அதை நாங்கள் கண்டு பிடித்தோம். அதன் பின்னர் வுட் ரிவர்க்கு (Wood River) வந்து எங்கள் கடைசிக் கூட்டத்தை நடத்தி, அந்த இரவு பீட அழைப்பைக் கொடுத்தபோது, மக்கள் பீடத்தை சுற்றி நெருக்கிக் கொண்டு வந்தார்கள், ஆனால் நான் வெளியே போகவேண்டும் என்று இருந்தபோது, ஓ, முன்னூறு அல்லது நானூறு பேர் பீடத்தண்டை இரட்சிப்புக்காக வந்திருந்தார்கள் என்று நான் யூகிக்கிறேன். பின்னர் நான் வெளியே புறப்பட்டுச் சென்றதும் ஆயிரத்தைநூறு அல்லது அதற்கு மேலும் ஜெபித்துக் கொள்ளும்படிக்கு வரிசையில் காத்திருந்தார்கள். 19எனவே நாங்கள் அதை மாற்றியமைக்க வேண்டியதாய் இருந்தது, ஆகவே அதன் பின்னர் அதை சரிசெய்யும் வகையில் மேய்ப்பர்களையும், உடன் ஊழியர்களையும் ஒருவர் பின் ஒருவராக மதிய ஆராதனைகளை எடுத்துக் கொள்ளும்படி செய்தோம். இரவு கூட்டங்களுக்கு அவர்கள் ஆரம்ப ஏற்பாடு செய்து இருந்தார்கள். அதன்பின் நான் வந்து கொஞ்ச நேரம் பேசினபின்பு, ஜெபவரிசையில் வரும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தேன். உங்களில் அநேகருக்கு கூட்டத்தினுடைய தன்மை என்னவென்று தெரிந்திருக்கும் அது தரிசனமாக இருக்கிறது. அது வெறுமனெ பிரசங்கித்து, பின்னர் தொடர்ந்து சென்று முழுக் கூட்டத்தாருக்கும் ஜெபிக்கும் ஜெபத்திலிருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கும். தெய்வீக வரத்தைக் கொண்டு அது இன்னொரு பரிமாணம் செல்கிறதாயிருக்கிறது. எனவே நான் எப்பொழுதும் இருப்பது போல் இல்லாமல், ஆனால் அதிகமாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, மக்கள் கூட்டத்திலிருந்து விலகி, தனிமையில் தங்கி, சாப்பிடுவதை நிறுத்தி, தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்து, அதன் பின்னர் அதே அபிஷேகத்தின் கீழாக கட்டிடத்துக்குள் வந்து, சிறிது நேரம் பேசி, பின்னர் ஜெபவரிசையில் வருகிறவர்களுக்காக ஜெபிக்கச் செல்வேன். 20அது வித்தியாசப்பட்டதாயும் மற்றும் என்னுடைய ஊழியத்தின் ஒரு பாகமாகவும் இருக்கிறது. நிச்சயமாக இவ்வுலகில் எந்தவொன்றும் ஒரு நபருக்கு சுகத்தைக் கொடுக்காது என்று நான் உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு நபரும் ஏற்கனவே சுகப்படுத்தப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். சுகத்தைப் பெறாத ஒரு நபர் கூட இங்கில்லை. ஆனால் ஏற்கனவே அவர்கள் சுகத்தைப் பெற்றவர்களாய் இருக்கிறார்கள். இரட்சிக்கப்படாத ஒரு பாவி கூட உலகத்தில் இல்லை. ஆனால் ஏற்கனவே அவர்கள் இரட்சிப்பைப் பெற்றவர்களாய் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து கல்வாரியில் மரித்தபோது, சரியாக அவர் தாமே அங்கே அதற்கான கிரயத்தை செலுத்தினார். அது சரியே. இப்பொழுது, நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவெனில் அதை நாம் நோக்கிப் பார்த்து, அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதே (பாருங்கள்). இப்பொழுது நீங்கள் சொல்லலாம் ''நல்லது நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே இரட்சிக்கப்பட்டேன்“ என்று. இல்லை, நீங்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பே இரட்சிக்கப்பட்டீர்கள், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டது இரண்டு வருடங்களுக்கு முன்புதான். பாருங்கள். அவர் மரித்தபோதே அந்த கேள்விக்கானதை சரி செய்து விட்டார். 21மனிதனால் செய்ய முடியாத இரண்டு காரியங்கள் இருக்கிறது. அது பாவங்களை மன்னிப்பது மற்றும் சுகப்படுத்துவதுமாகும் (Forgive sins or heal). அப்படிச் செய்யும்படி மனிதனுக்குக் கொடுக்கப்படவில்லை, மற்றும் அது கொடுக்கப்படவும் மாட்டாது. அது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும். ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து, அதை உங்களுக்கு சுட்டிக் காட்டும்போது, நீங்கள் உங்கள் இரட்சிப்பையோ அல்லது சுகத்தையோ ஏற்றுக்கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்களுடைய மீறுதலினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நீங்கள் சுகமானீர்கள். (முடிக்கப்பட்ட ஒன்று) (Past tense) இப்பொழுது, சகோதரன் ராபர்ட்ஸ் இன்னும் மற்றவர்களைப் போன்ற அநேக ஊழியக்காரர்கள் ஊழியக்களத்தில் இறங்கி, வார்த்தையை எடுத்து அதை அவ்வளவு தெளிவாக உங்களுக்கு விவரித்துக் காண்பிக்கிறார்கள். இந்த பட்டணத்தில் மக்களாகிய உங்களோடு இருக்கும் சகோதரன் பாஸ்வர்த், சகோதரன் ஹாஸ்பர்ன், இன்னும் அனேக மனிதர்கள், அவர்கள் வார்த்தையை நன்கு கற்றறிந்தவர்கள் (Scholars). அவர்கள் பாவபரிகாரம் (Atonement) என்னும் வார்த்தையின் மூலம் உங்களுக்கு தெய்வீக சுகமளித்தலை போதிப்பார்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு வார்த்தையை அவர்கள் வெளிப்படையாகவும், தெளிவாகவும் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறார்கள், அவ்வளவுதான். எனவே அதன்பின் நீங்கள் விசுவாசத்தினால் உயர்த்தப்பட்டு, அதை ஏற்றுக் கொள்கிறீர்கள். அதை அந்த வழியில்தான் செய்ய வேண்டும். 22அநேகர், வியாதியஸ்தர்கள் மீது எண்ணெய் பூசுகிறார்கள். இன்னும் அநேகர், வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அவர் செய்து முடித்தபின் இவ்விதமான ஒழுங்கில்தான் எல்லாக் காரியங்களையும் தேவன் சபையில் வைத்து வைத்தார். தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கும் ஒவ்வொரு ஊழியக்காரனும், உலகத்திலிருக்கிற மற்ற எந்த நபரும் உரிமையைப் பெற்றிருப்பது போல், அவனும் இவ்வுலகில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படிக்கு தேவனிடத்திலிருந்து அவ்வளவு உரிமையையும், அதிகாரத்தையும் பெற்றிருக்கிறான். பாருங்கள், சபையில் இருக்கும் ஒவ்வொரு சாதாரண நபரும் அதே அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். நீங்கள் சுகமடையும்படிக்கு ஒருவருக்கொருவர் உங்கள் தப்பிதங்களை (faults) அறிக்கை செய்து, ஒருவருக்கொருவர் ஜெபம் பண்ணுங்கள். எனவே தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கும் ஒவ்வொரு நபரும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்படிக்கு உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ஆம், அது ஒரு பொதுவான ஒழுங்குமுறை. அது சரிதான். 23எனவே, தேவன், எல்லா வகையிலும் தன்னுடைய வார்த்தையில், சபையில் அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை போதகர்களாகவும், சிலரை சுகமளிக்கும் வரத்தையுடையவர்களாயும், சிலரை அந்நிய பாஷை பேசுகிறவர்களாயும், சிலரை வியாக்கியானம் பண்ணுகிறவர்களாயும் இன்னும் மற்ற எல்லா வரங்களையும் சபையின் பக்திவிருத்திக்கும், சபையின் ஒருமைப்பாட்டிற்கும், நம்மெல்லாரையும் ஒரே ஜனமாகவும், (அது சரிதானே? அது சரிதான்,) அவருக்குள் ஒன்றாயிருக்கும்படிக்கும் ஒரே ஆத்துமாவும், ஒரே இருதயமும், ஒரே சரீரமும், ஒரே ஆவியுடைய சகோதர சிநேகமுடையவர்களாய் இருக்கும்படிக்கு இவ்வெல்லாவரங்களையும் சபையில் தேவன் வைத்தார். நாம் இரு ஆவிகளால் அல்ல ஆனால் எல்லாவற்றிற்கும் மேலானவரும், எங்கும் நிறைந்தவரும், எல்லாவற்றையும் அறிந்தவரும், நம்மெல்லாருக்கும் பிதாவும், தேவனுமான ஒரே ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆம், இதற்காகத்தான் இந்த வரங்களை தேவன் சபையில் வைத்திருக்கிறார். அந்நியபாஷை வரமுடைய சிலரை அந்நிய பாஷையில் பேசும்படிக்கு, வேறு சிலரை அந்நிய பாஷைக்கு வியாக்கியானம் பண்ணுகிறதற்கு, வேறு சிலரை பிரசங்கம் பண்ணும்படிக்கு புறப்பட்டுப் போகச் செய்திருக்கிறார். 24இப்பொழுது, தெய்வீக வரங்களை நம்பாத மக்கள் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும், இருப்பினும் அவர்கள் பிரசங்கிமார்களாயிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களால் எப்படி அதை பிரசங்கிப்பதற்கு (தெய்வீக) உத்வேகத்தை பெற்றுக் கொள்ளமுடியும். பிரசங்கிக்கக் கூடிய வரம் என்று ஒன்று இல்லாமற்போனால், பின்னர் அதன்படி பார்க்கும்போது, ஒவ்வொரு நபரும் பிரசங்கிமார்களாய் இருக்கிறார்களே சபையில் தேவன் சிலரை (அதை தேவனே) அப்போஸ்தலர்களாகவும், தீர்க்கதரிசிகளாகவும், போதகர்களாகவும், சுவிசேஷர்களாகவும், இன்னும் அப்படிப்பட்டவர்களை, எல்லாவற்றையும் சபையில் வைத்திருக்கிறார். அங்கே அவர்களை தேவனே வைத்திருக்கிறார். எனவே அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும்படிக்கு உத்வேகத்தை பெற்றிருக்கிறார்கள். சில மக்கள் ஒரு வரத்திற்கு மேலாகவும் பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு நபருக்குள் குறைந்தபட்சம் ஒரு வரமோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்கும். எனவே இவையெல்லாம் சேர்ந்து, அவள் (எடுத்துக் கொள்ளப்படுதலில்) போக ஆயத்தப்படும்படிக்கு, கிறிஸ்துவின் சரீரத்தை மேலேழுப்பிகட்ட இவையாவும் சேர்ந்து கிரியை செய்கிறது. 25பழைய ஏற்பாட்டில் செய்தியை பெற்றுக் கொள்ளும்படிக்கு இரண்டு வழிகள் அவர்களுக்கு உண்டாயிருந்தது. அதில் ஒன்று சொப்பனக்காரர் (Dreamer) இன்னொன்று ஒரு தீர்க்கதரிசி (Prophet). அதன் பின்னர் அவர்களுக்கு ஊரீம் தும்மீமும் இருந்தது. ஊழியக்காரர்களாகிய நீங்கள் நான் எதைப் பேசுகிறேன் என்று அறிந்திருக்கிறீர்கள், அது ஆரோனின் மார்பகத்தின் மேல் இருக்கும் ஊரீம் தும்மீம் (Urim Thummim). எனவே ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனத்தை கண்டு, அது அறிவிக்கப்பட்டபோது, அதுதாமே ஊரீம் தும்மீம் மேல் வெளிச்சத்தை பிரகாசிக்காதபட்சத்தில், அது சரியான சொப்பனமாக கருதப்படமாட்டாது. அதே போல் ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைப்பானென்றால், அதுதாமே ஊரீம் தும்மீம் மேல் வெளிச்சத்தை பிரகாசிக்காதபட்சத்தில், அது பொய்யான தீர்க்கதரிசனமாக கருதப்படும். ஆனால் அது வெளிச்சத்தை பிரகாசிக்குமானால் அது ஒரு உண்மையான தீர்க்கதரிசனமாகும். இப்பொழுது, ஊரீம் தும்மீம் போனதிலிருந்து, தேவனுடைய வேதாகமமே ஊரீம் தும்மீமாய் இருக்கிறது. எனவே இப்பொழுது ஒரு சொப்பனக்காரன் ஒரு சொப்பனமும், ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமும் உரைப்பானென்றால், அது தேவனுடைய வார்த்தையில் இல்லாமற்போகுமானால், அதை அப்படியே விட்டுவிட வேண்டும் (ஏற்றுக் கொள்ளக் கூடாது). அது சரிதான். ஆனால் அது தேவனுடைய வார்த்தையில் இருக்குமானால் அதுதாமே தேவன் பேசுகிறதாய் இருக்கிறது. அதுசரி. அவருடைய வார்த்தைதான் தேவனுடைய ஊரீம் தும்மீமாய் இருக்கிறது. “வானமும் பூமியும் ஒழிந்துபோம் ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை”. 26இதுவே முதன்மையானதும், அஸ்திபாரமும் மற்றும் கிறிஸ்தவ சத்தியத்திற்கான ஒரே அஸ்திபாரமாய் இருக்கிறது, அது தேவனுடைய வேதாகமாக இருக்கிறது. அதுதாமே தேவனுடைய வேதாகமத்திலிருந்து வரவேண்டியதாக இருக்கிறது. அதையே மற்ற நாடுகளில், எப்படியாக அவை அஞ்ஞான வழிகளிலும் (Pagan ideas), மூடநம்பிக்கைகளிலும் மற்றும் எல்லாவகையான பிசாசியல்களிலும் வைக்கப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடியும். அங்கே இருக்கும் அப்படிப்பட்ட காரியங்கள் உங்களுக்கு சவாலாக இருக்காது என்று நீங்கள் எண்ணவேண்டாம். நிச்சயமாகவே அவைகள் உங்களுக்கு சவாலாக இருக்கும். எனவே நீங்கள் அப்படிப்பட்ட நாடுகளுக்கு போவதற்கு முன் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்றும், யாரை அறிந்திருக்கிறீர்கள் என்றும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் அங்கிருக்கும் அந்த பெரிய சூனியக்காரர்களும் இன்னும் அது போன்றவர்களும் சரியாக ஒவ்வொரு வழியிலும் உங்களுக்கு சவால்விடும்படிக்கு அங்கிருக்கிறார்கள். நீங்கள் ஒருபோதும் பயப்படவேண்டாம், நாம் மெய்யான, ஜீவிக்கிற தேவனை மாத்திரமே ஆராதிக்கிறோம். அது சரியே. 27இப்பொழுது, நான் வியக்கிறேன், ஏனெனில் இவ்விதமான ஒரு வகையில் நான் கூட்டங்களை அமைக்க முடியும் என்று... நான் உங்களுடைய சகோதரனாக ஊழியக்காரனாக இங்கே இருக்கிறேன். நான் உங்களை இதயப்பூர்வமான கிறிஸ்தவ அன்பினிமித்தம் நேசித்து, அக்கரையில் உங்களோடு கூட என்றென்றும் நித்தியத்தைக் கழிக்க எதிர் பார்க்கிறேன். நான் எதை சிறப்பானதென்று நினைக்கிறேனோ அதை உங்களுக்குச் செய்யவே இங்கே நான் இருக்கிறேன். நான் சகோதரர்களிடத்தில், இங்கே ஃபீனிக்ஸில் எவ்விதமான கூட்டம் வைத்தால் ஏற்றதாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அவர்கள், “கர்த்தர் வழி நடத்துகிற வழியில்”, என்றார்கள். ஆம் அவ்விதமான சகோதரர்களோடு நான் ஊழியம் செய்ய விரும்புகிறேன். கர்த்தர் வழிநடத்துகிற வழியில். ஆலோசனைக்காரர் அநேகரால் நன்மை உண்டாகும். எனவே இம்மதிய வேளையில் இந்த கூட்டத்தாரை குறித்து ஆச்சரியப்படுகிறேன், எப்படியெனில் நாம் ஜெபத்திற்கு போனபிறகு உங்கள் இருதயங்களில் அதைக் குறித்து நினைத்து இது எப்பேற்பட்ட கூட்டமாயிருக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். எனவே இங்கே வியாதியஸ்தர் இருப்பார்களானால், அதாவது ஜெபவரிசையில் ஜெபிக்கப்படும்படிக்கு வியாதியஸ்தர் அதிகமானோர் இருக்கும் பட்சத்தில், நாம் சுகமளிக்கும் ஆராதனையை வைத்துக்கொள்வோம். அதே சமயத்தில் அது பிரசங்க ஆராதனைகளாகவும், ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பை அருளுகிறதாயும், கூட்டத்துக்கு வந்திருக்கிறவர்களுக்கு ஜெபத்தை ஏறெடுப்பதுமாயும் இருக்குமானால்... 28எப்போதெல்லாம், எல்லாநேரத்திலும் ஒவ்வொரு ஆராதனையிலும்.... தெய்வீக சுகமளித்தல் என்பது மீனைப் பிடிப்பதற்காக கொக்கியில் வைக்கப்படும் தூண்டில் இரையைப் போன்றது. பாருங்கள். நீங்கள் மீனுக்கு தூண்டில் கொக்கியைக் காண்பிப்பதில்லை. ஆனால் தூண்டிலில் இருக்கும் இரையைத்தான் (Bait) காண்பிக்கிறீர்கள். அது தூண்டில் இரையை கவ்விப்பிடித்து, தூண்டில் கொக்கியில் (hook) மாட்டிக் கொள்கிறது. ஆகவே, அது... கிட்டத்தட்டதொண்ணூறு... எண்பது சதவீதம் இயேசு கிறிஸ்துவின் கூட்டங்கள் எல்லாம் தெய்வீகசுகமளிக்கும் கூட்டமாக இருந்தது. எனவே மக்களுடைய மனநிலையை அறிந்து கொள்ளும்படிக்கு அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி, அவர்களை கொண்டுவர வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து அதன் பின் அவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார். அது சரியே அந்த வழியில் தான் ஆப்பிரிக்காவில் ஒரு பிற்பகலில் பிறகு முப்பதாயிரம் மனம் மாற்றம் அடைந்தவர்களை, கிறிஸ்தவத்தை அறியாத புறஜாதியினரை சம்பாதித்துக் கொண்டோம். உலகம் இதுவரையில் பெற்றிராத இரண்டு மடங்கு திரும்பவும் திரும்பவும் எண்ணக்கூடிய, கிறிஸ்தவத்தை அறியாத முப்பதாயிரம் புறஜாதியினரை பீடஅழைப்பில் பெற்றுக் கொண்டது என்று நான் யூகிக்கிறேன். எனவே முதலாவது தெய்வீக சுகமளித்தல் அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. 29இப்பொழுது, நாம் கர்த்தரை முழு அளவில் சேவிக்க விரும்புகிறோம். எனவே இன்னும் ஒரு சில நிமிடங்களில் நாம் ஜெபித்து நமது கர்த்தரிடத்தில் அதை கேட்போம். எத்தனை பேர்... நாம் சுகமளிக்கும் ஆராதனையை கொண்டிருக்கும்படி கர்த்தரிடம் நாம் விரும்புவதாக நீங்கள் உணரும் பட்சத்தில், அதை நாம் அறிவித்து, பின்னர் அதை தொடங்கலாம். நாம் துவங்கலாம். அப்படியில்லாத பட்சத்தில் நாம் வேறு விதத்தில் அதை துவங்கலாம். எனவே கர்த்தருடைய சித்தம் எதுவோ, அதை நாம் செய்ய முற்படுவோம். நான் இப்பொழுது... நான் வழக்கமாக.... என் வேதாகமத்தில் எழுதிவைத்துள்ள வெளிநாட்டுக்கான ஒரேயொரு தரிசனத்தை நான் பெற்றுள்ளேன். இங்கே இப்பொழுது இருப்பது தேவனுடைய சித்தமாக இருக்கக் கூடும். சமீபத்தில், நான் பெரிய கெல்லாக் அரங்கத்தில் (kellogg Auditorium), ஒரு அருமையான கூட்டத்தில் இருந்தேன். அந்த இடமானது கூரையைத் தொடும் வரை நிரம்பி வழிந்தது. நாங்கள் அங்கே இரண்டு வாரம் தங்கி இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் அங்கே கிட்டத்தட்ட நான்கு நாட்கள் தான் இருந்தோம். ஒரு பிற்பகலில் ஜெபிக்கும்படிக்கு ஒரு ஏரியண்டை சென்றிருந்தேன். அங்கே கர்த்தர் இறங்கி வந்தார். ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு, நான் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தபோது, நான் ஒரு படகின் பின்னாக உட்கார்ந்தபடி நீரோட்டம் போகிறபோக்கில் போய்க் கொண்டிருந்தேன். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அருகில் வந்து, என்னை வலது புறமாக திரும்பச் செய்து, மின்னியாபொலிஸ் (Minneapolis) போகச் சொன்னார். 30இப்பொழுது, ஒரு கூட்ட ஊழியக்காரர்களுக்கு அதை புரியவைப்பது, அது கடினமாயிருக்கும். ஆனால் நான் அங்கிருந்து உடனடியாக போக வேண்டியதாய் இருந்தது. எனவே மின்னசோட்டாவில் இருக்கும் மின்னியாபொலிஸில், கோடர்ன் பீட்டர்ஸன் (Gordon Peterson), நீங்கள் யாராவது அவரை அறிந்திருப்பீர்களானால், அவருக்கு கடிதம் எழுதி அது கர்த்தருடைய சித்தமா, இல்லையா என்பதைக் கேட்டு அறிந்துகொள்ளலாம். தேவன் அங்கே அவ்விதமாக காரியத்தைச் செய்தார். இப்பொழுது, அடுத்த ஜனவரியில் சகோதரன் ராபர்ட்ஸ் இங்கே இருப்பார் என்று நான் அறிந்து கொண்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்த கூட்டங்களை அவர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள், ஏனெனில் அவர்கள் இன்னொரு விதமான வழி நடத்துதலின்படி செல்கிறார்கள். ஆனால்... அது அதே பரிசுத்த ஆவியினால் தான். பாருங்கள். அவ்விதமாக செய்யும்படிக்கு அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். அவ்விதமாகவே அது இருக்கிறது... என்னுடையதோ தரிசனத்தினால் நடத்தப்படுகிறது. இப்பொழுது சரியாக, எங்கே போக வேண்டும் என்று என்னிடத்தில் கர்த்தர் பேசும்போது, உடனடியாக அதை நான் செய்வேன். அது எங்கிருந்தாலும் அவ்விதமான கூட்டங்களை ஏற்பாடு செய்வது என்பது கடினமானதுதான். இதெல்லாம் நான் சகோதரன். பல்லார்ட்டிடத்தில் கூறினதுபோல் “கர்த்தருக்கு சித்தமானால், இந்த எட்டு நாட்கள் தொடர்ந்து நான் கூட்டத்தை நடத்துவேன்”, என்று இருக்கிறது. அது சரிதானே, சகோதரனே? ஆம் ஐயா. வெறுமனே அது கர்த்தருக்கு... நீங்கள் விளம்பரம் செய்கிற எந்தவொன்றுக்கும் நான் பொறுப்பாளியாக இருக்கிறேன். ஆனால் கர்த்தர்... 31காரணம் அவர் எப்படியாக அங்கே ஆப்பிரிக்காவில் காரியங்களை செய்து மற்றும் சில... ஒரு சிறிய தவறுதலான வழிநடத்துதலை செய்யும்படிக்கு நான் விட்டுவிட்டபடியால் எப்படிப்பட்ட தொல்லையில் நான் சிக்கிக் கொண்டேன் என்பதை இவ்வாரத்தில் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். கர்த்தர் எனக்கு தரிசனத்தைக் காண்பித்து வேறு ஒரு காரியத்தை செய்யும்படிக்கு என்னிடத்தில் கூறியிருந்தார். ஆனால் அதை தவிர்த்து நான் அவர்களை வேறொன்றை பேசும்படிக்கு விட்டுவிட்டேன். பாருங்கள். எனவே அதற்காக கிரயத்தை நான் செலுத்தினேன் அல்லவா? ஆகவே அவ்விதமாக அதைத் திரும்பவும் செய்ய நான் ஒருபோதும் விரும்பவில்லை. எனவே, இப்பொழுது நாம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்ற வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆகவே இங்கே எத்தனை வியாதியஸ்தர்கள் ஜெபிக்கும்படிக்கு இருக்கிறார்கள்? ஜெபிக்கப்படவேண்டும் என்று இருக்கிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். உங்களுடைய கரங்களை நான் பார்க்கட்டும், இப்பொழுது ஜெபிக்கும்படிக்கு கட்டிடம் எங்கிலும் வியாதியஸ்தர்கள் இருக்கிறார்கள். சரிதான். வியாதியஸ்தர்களுக்கான ஜெபம் செய்யப்படுதல் வேண்டாம் என்று வெறுமனெ பழைய பானியிலான சுவிசேஷ பிரசங்கம் மற்றும் அது போன்ற காரியங்களை வைத்துக் கொள்வோம் என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்டவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அப்பொழுது எனக்கு ஒரு யோசனை கிடைக்கும். இங்கே நாம் பார்க்கும்போது ஒரு சுகமளிக்கும் ஆராதனையை வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது, அப்படியில்லையா? அது சரி. 32சரி, இப்பொழுது கர்த்தருக்கு சித்தமானால் நாம் இரண்டையும் நம்மால் முடிந்த சிறந்த முறையில் கலந்து, நம்மால் ஆகும் ஒவ்வொன்றையும் செய்வோம். எனவே இப்பொழுது மக்களை வரிசையில் வரச் செய்யும்படிக்கு நாம் அவர்களுக்கு ஜெப அட்டையை கொடுக்கவேண்டியதாய் இருக்கிறது. அதை ஒவ்வொருவரும் அறிவார். சகோதரன் ராபர்ட்ஸ் இன்னும் அதுபோன்ற பெரும் திரள் ஜனக்கூட்டத்தைக் கையாண்டு அனுபவம் பெற்றவர்களுக்கும் நாம் ஜெபஅட்டை கொடுக்கிறோம் என்று தெரியும். எனவே, அதை நாம் செய்யும்படி சின்னச் சின்ன முன்ஏற்பாடு காரியங்களிலும் இன்னும் அது போன்ற காரியங்களிலும் நாம் தலையிட விரும்பவில்லை. உங்களால் முடிந்த மட்டும் மாலை ஆறு மணியளவில் இங்கு வந்துவிடுங்கள். உங்களால் எவ்வளவு சீக்கிரம் இங்கே வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கே வந்துவிடுங்கள். உங்களால் முடிந்தமட்டும் ஆறு மணிக்கெல்லாம் இங்கே வந்து விடுங்கள், ஆறரை மணிக்கு பிறகு காலதாமதமாக வரவேண்டாம். ஏனெனில் அவர்கள் ஏழு மணிக்கோ அல்லது அவ்விதமான மணிவேளையில் கூட்டத்தை ஆரம்பிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகவே, நாம்... செய்ய விரும்பவில்லை. 33உள்ளே வருகிற எவரும், நீங்கள் உங்களுடைய ஜெப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே நாம் அப்படி செய்யும் பட்சத்தில் அதுதாமே கூட்ட முன்ஏற்பாட்டு காரியங்களுக்கு இடையூராக இருக்காது. இப்பொழுது கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. இவ்வாரத்தில் கர்த்தருக்குச் சித்தமானதை என்னால் முடிந்தமட்டும் செய்யப் பார்ப்பேன். இப்பொழுது, கர்த்தரை நேசிக்கிற ஒவ்வொருவரும், “ஆமென்” என்று சொல்வார்களாக. ஓ, அது அருமையாயிருக்கிறது. இப்பொழுது நான் ஒரு சிறிய வசனத்தை இங்கே வேதத்திலிருந்து படிக்க விரும்புகிறேன், ஒரு வேளை நான் கூறுவது, தவறிப் போகலாம், ஆனால் இது ஒருபோதும் தவறிப் போகாது. பரிசுத்த லூக்கா, 2-ம் அதிகாரம், 25-ம் வசனம். இங்கே நான் இரண்டு அல்லது மூன்று வசனங்களை வாசிக்கட்டும். அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான் அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணும் முன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது (வெளிப்படுத்தப்பட்டிருந்தது) அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்கு தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து, ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர். உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றான். 34வாசித்த அவருடைய வார்த்தையை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. இந்த வார்த்தையின் ஆக்கியோனோடு நாம் பேசுகையில் நாம் தலைகளை தாழ்த்துவோம். இப்பொழுது, இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் எங்கள் முழு மானிட ஜீவியத்தின் தாழ்மையோடு, விசுவாசிக்கிற தேவனுடைய பிள்ளைகளாக எங்களை சமர்ப்பிக்கும்படிக்கு நாங்கள் உம்மண்டையில் வந்திருக்கிறோம். எங்களுடைய ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து, எல்லா அநீதிகளிலிருந்தும், எல்லா சுயநலமான காரியங்களிலிருந்தும் எங்களை சுத்திகரியும். பரிசுத்த ஆவியானவர் தாமே இம்மதிய வேளையில் வந்து இங்கிருக்கிற ஒவ்வொருவர் மேலும் அவருடைய ஆசீர்வாதத்தைப் பொழிந்தருள்வாராக. இதை அளியும், கர்த்தாவே. இந்த பெரிய அழகான பீனிக்ஸ் பள்ளத்தாக்கிலிருந்தும், இதை சுற்றியிருக்கும் பட்டணங்களிலிருந்தும் வந்திருக்கிற இந்த ஊழியக்காரர்களுக்கும், இந்த மக்களுக்கும் மற்றும் இந்த தேசம் முழுவதுமாக பரவியிருக்கும் வெவ்வேறு சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்பொழுது, பிதாவே, நாங்கள் யாவரும் வந்து இலவசமாக பருகக் கூடிய ஜீவதண்ணீரின் ஊற்றாகிய, அல்லேலூயா‚ ஒரு பொதுவான பருகக்கூடிய இடத்திற்கு நாங்கள் வந்திருக்கிறோம். கர்த்தாவே, இப்பொழுது இந்த வார்த்தையை எழுதின அவர் தாமே வந்து, வார்த்தையை வியாக்கியானம் செய்து, அதை பிரத்தியட்சப்படுத்துவாராக (Manifest). 35தேவனே, இந்த வருகிற வாரத்தில் முடவர்கள் நடக்கும்படிக்கும், குருடர்கள் பார்வையடையும்படிக்கும் செய்வீராக. ஆவிக்குரிய வார்த்தையில் சொல்வோமானால், குருடர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, இப்பொழுது பரிசுத்த ஆவியின் மகிமையான மழையை அவர்கள் காணும்படிக்கு, எங்களுக்கு இன்னொரு பழைய பாணியிலான உலுக்குதலை எங்களுக்கு தந்தருள்வீராக. இப்பொழுதே இதை அளியும்,கர்த்தாவே. ஒவ்வொரு கூட்டத்தையும் ஆசீர்வதியும். சகோதரன் ஷுலரையும் (Brother Schuller) அவருடைய கூட்டங்களையும் ஆசீர்வதியும். நீர் அவரோடு கூட இருக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். அநேக ஆத்துமாக்களை உள்ளே கொண்டு வாரும், கர்த்தாவே. உண்மையிலேயே, இவ்வாரத்தில் கிறிஸ்துவுக்காக நூற்றுக்கணக்கான ஆத்துமாக்களை அவர் சம்பாதிப்பாராக. இப்பள்ளத்தாக்கில் இருக்கிற ஒவ்வொரு சபையையும் ஆசீர்வதியும். மேலும் ஒரு மகத்தான வகையில் பரவக்கூடிய எழுப்புதலானது இந்த பள்ளத்தாக்கு எங்கிலும் பரவத்தக்கதாக இதுதாமே ஒரு தொடர் ஓட்டத்தைப் போல் ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கு சென்று கடல் கடந்து அதினுடைய சத்தமானது உலகமெங்கிலும் தொனிக்கட்டும். அப்பொழுது தேவனுடைய மகிமையை காணும்படிக்கு, இந்த சூரிய பள்ளத்தாக்கிற்கு மக்கள் பறந்து வரத்தக்கதாக, உலகத்திலிருக்கும் எல்லா பாகங்களிலுமிருந்தும் மக்களை இங்கே இழுத்திட செய்யக்கூடிய ஒரு பழைய பாணியிலான எழுப்புதலை தந்தருளும். இதை அளியும், பிதாவே. 36நீங்கள் மலையின் மேல் வைக்கப்பட்ட விளக்காயிருக்கிறீர்கள், மலையின் மேல் வைக்கப்பட்ட பட்டணம் மறைந்திருக்க மாட்டாது என்று வேதாகமம் கூறுகிறது. மக்கள்தாமே இங்கே ஓடி வரத்தக்கதாக, ஒவ்வொரு சபையும் எழுப்புதலையும் ஐக்கியத்தையும் பெற்று, வார்த்தை என்ன கூறுகிறதோ அதை பரிசுத்த ஆவியானவர் தாமே செய்து காட்டி, நிறைவேறச் செய்து தேவனுடைய வார்த்தையை நிஜப் பொருளாக நிறைவேற்றக் கூடிய மலையின் மேல் வைக்கப்பட்ட பிரகாசிக்கிற விளக்காக இப்பட்டணம் இருக்கட்டும், இதை அளியும் கர்த்தாவே. பிதாவே, இதை நிறைவேறச் செய்யும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது, ஆராதனைகளை அபிஷேகியும். இந்த கட்டிடத்திற்காக நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதை எங்களுக்கு வாடகைக்கு கொடுத்த மக்களையும், கட்டிட பொறுப்பாளர்களையும், மற்றும் அதிகாரப் பொறுப்பில் இருக்கிறவர்களையும் ஆசீர்வதியும். அவர்கள் இரட்சிக்கப்படாதவர்களாய் இருப்பார்களானால், அவர்களை நீர் இரட்சிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் நித்திய ஜீவனையும் மற்றும் இயேசுவின் மூலம் உலகில் வரப்போகிற ஜீவனையும் பெற்றுக் கொள்ளட்டும். 37இப்பொழுது நீர் இந்த கட்டிடத்தை கட்டுக்குள்ளாக எடுத்துக்கொண்டு இக்கட்டிடத்தை அபிஷேகித்தருளும். பரலோக தூதர்கள் யாக்கோபின் ஏணி வழியாக இறங்கி வந்து இராணுவ வீரர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்வது போல; ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மூலையிலும் தங்கள் கடமையின் பாதையில் சரியாக தங்கள் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு இடத்திலும் நிற்கட்டும் மற்றும் இவ்விடத்தில் எழுப்புதல் நடந்து முடியுமட்டும் அவர்கள் இக்கட்டிடத்தை விட்டுப் போகாமல் இருப்பார்களாக. தேவனே, இதை அளியும். அவர்கள் தாமே இங்கிருப்பவர்களின் இருதயங்களோடு பேசுவார்களாக மற்றும் மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் தேவனுடைய வார்த்தையோடு கூட தொடர்ந்து வரட்டும். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நான் மக்கள் மத்தியில் பிரயாணம் செய்கையில், இரண்டு வகையான மக்கள் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். அதில் ஒன்று பெந்தேகொஸ்து (Pentecostal) அல்லது முழு சுவிசேஷ (Full Gospel), தெளிவாக சொல்வோமானால் அநேக வெவ்வேறு வகையான மக்களை கொண்டிருக்கும் முழு சுவிசேஷ மக்களாயிருக்கிறார்கள். நான் கண்டுபிடித்த அடுத்த வகையான மக்கள் அடிப்படை வாதிகள் (fundamental). தங்களுடைய நிலை (Position) என்னவென்பதை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாய், (நன்றி சகோதரனே) இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதின் மூலம் தாங்கள் தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளும் என்ற நிலையை பெற்றிருக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். பரிசுத்த யோவான் 5:24-ம் வசனம், “என் வார்த்தைகளை கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு”, என்று கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு அவ்வளவு விசுவாசம் இருப்பதில்லை. 38அதற்குப் பிறகு நான் கண்டு பிடித்தது என்னவெனில், பெந்தேகொஸ்தே மக்கள் அல்லது முழு சுவிசேஷ கூட்டத்தார் வல்லமையை பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதை இயக்கக்கூடிய விசுவாசம் அவர்களுக்கு இல்லாமலிருந்தது. அது இவ்விதமாக இருக்கிறது. எப்படியெனில் ஒரு மனிதனுக்கு வங்கியில் அதிகமான பணம் இருக்கிறது. ஆனால் அதை எடுப்பதற்கான காசோலையை எப்படி எழுதவேண்டும் என்று அவனுக்குத் தெரியாது. இன்னொருவனுக்கு காசோலையை எப்படி எழுத வேண்டும் என்று தெரியும். ஆனால் வங்கியிலோ பணம் இல்லை. அந்த இருவரையும் உங்களால் ஒன்றாக கொண்டு வரமுடியுமானால், ஆயிரவருட அரசாட்சி வந்துவிடும். இப்பொழுது, பெந்தெகொஸ்தே அல்லது உலகம் முழுவதும் இருக்கும் முழு சுவிசேஷ மக்களிடத்தில் ஒரு மகத்தான விசுவாசம் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். அவர்கள் விசுவாசத்தைப் பெற்றிருப்பதற்கான காரணம் அவர்கள் ஒரு படிமேலேறி சென்றிருக்கிறார்கள். இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய ஆவியினால் அவர்கள் மறுபடியும் பிறந்திருக்கிறார்கள். அநேக மக்கள் என்னிடத்தில், “சகோதரன், பிரான்ஹாம், நீங்கள் பெரியவனாகும் போது, உங்கள் தகப்பனைப் போல் இருப்பீர்கள்”, என்றார்கள். ஆம், ஏனெனில் அவர் என் தகப்பன். அந்த காரணத்தினால் தான் நான் அவரைப்போல் காணப்படுவேன். 39நாம் பெற்றிருக்கிற அநேக காரியங்கள் குடும்ப வம்சாவழித் தோன்றல் மூலம் (strain) தோற்றத்தில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை கொடுக்கிறது. அவ்விதமே நாம் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, தேவனுடைய குடும்ப வழித்தோன்றல் மூலம் நாம் தேவனுடைய குணாதிசயங்களைப் பெற்றிருக்கிறோம். எனவே தான் நாம் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறோம். அவ்விதமாகத்தான் முழு சுவிசேஷ மக்களும் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருப்பதை நான் கண்டு பிடித்தேன். அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதை (supernatural) விசுவாசிக்கிறார்கள். ஆனால், இன்னொரு கூட்டமோ அந்த இடத்துக்கு ஏறிப்போகாததால், இயற்கைக்கு மேம்பட்டதை அவர்களால் விசுவாசிக்க கூடாமல் போகிறது. அவர்கள் விசுவாசிப்பதற்கான ஒரு காரியமும் அவர்களிடத்தில் இல்லை. பாருங்கள். 40ஒரு மேஜையின் மேல் தண்ணீர் வைக்கப்படாத பட்சத்தில், அங்கிருந்து நான் தண்ணீரை எப்படி எடுக்க முடியும்? கவனியுங்கள். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும், அப்பொழுது தான் தேவன் உங்களுக்கு உள்ளாக வருவார். ஆம், இல்லாதவைகளிலிருந்து தேவன் உலகத்தை உண்டாக்கினார். அவர் வெறுமனெ “உண்டாகக்கடவது” என்று பேச, அந்த வார்த்தை அதற்கான பொருளாக மாறி அதை காட்சியில் கொண்டு வந்தது. இந்த பிற்பகல் நீங்கள் உட்கார்ந்திருக்கிற இந்த இடமும் கூட தேவனுடைய வார்த்தையின் பிரதியட்சமாயிருக்கிறது (manifest). அது சரிதான் நல்லது, இப்பொழுது அதின் ஒரு பாகத்தை பெற்றிருக்கிற ஒரு மனிதன்... எனவே, இயேசு, “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறேன்”, என்று கூறினார். நித்தியம் ( eternal) என்ற வார்த்தை, ஸோய்யி (Zoe) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது, அதற்கு அர்த்தம் “தேவனுடைய ஜீவன்” (the life of God.) என்பதாகும். நல்லது, எனவே நாம் மறுபடியும் பிறந்து, தேவனுடைய ஜீவனை நமக்குள்ளாக பெற்றிருக்கும் போது, நமக்குள் தேவனுடைய ஜீவன் இருக்கிறது. அது தாமே தேவன் எவ்விதமாக விசுவாசிக்கிறாரோ அவ்விதமாக நம்மை விசுவாசிக்கும்படி செய்யும். எப்படியெனில், வார்த்தை என்ன கூறியிருந்தாலும் அது நிச்சயம் உருவாக்கப்படும் (நிறைவேறும்) என்பதே. பாருங்கள். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம் என்று அது (வார்த்தை) கூறியிருக்குமானால், அது குணமாகிவிட்டது அவ்வளவுதான். ஏனெனில் தேவன் அவ்விதமாக உரைத்திருக்கிறார். எனவே ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, அவன் தேவனுடைய குமாரனாயிருக்கிறான். கூடாதது என்று இருக்கிற காரியங்களைக் கூட அவன் கூடும் என்று விசுவாசிக்கிறான். அது எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதை அவன் விசுவாசிக்கிறான். அதற்குக் காரணம் என்னவென்றால், பரிசுத்த ஆவியின் வடிவில் தேவன் அவனுக்குள்ளாக இருப்பதினால், அதை அவன் விசுவாசிக்கிறான். பாருங்கள். 41எனவே, அவனுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர் இல்லாத பட்சத்தில், அவனுடைய சிந்தையானது அதின்மேல் இளைப்பாற முடியாது. மேலும் அவனிடத்தில் அதற்கான காரியம் என்பதே இல்லை, அதினிமித்தம் அவனால் தேவனுடைய காரியங்களை புரிந்துக்கொள்ள முடியாது. அவனுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவனுடைய இயற்கையான சிந்தையானது தேவனுடைய காரியங்களைப் புரிந்து கொள்ளாது; அது அவனுக்கு முட்டாள்தனமாக (foolish) இருக்கும். நம் மத்தியில் ஒரு பெரிதான தடை (greatest hindrances) இருப்பதை நான் கண்டுபிடித்தேன். அது என்னவெனில், சரியாக நீங்கள் தேவனுடைய மகத்தான காரியங்களுக்கு மத்தியில் இருக்கும் பட்சத்தில், “அது இன்னும் வரவில்லை என்றும், இனி மேல் தான் அது வரவேண்டும்” என்றும் தேவனுடைய மகத்தான காரியங்களை வேறொரு காலத்திற்கு பொருத்துகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் கூறலாம், “இன்னும் கொஞ்ச... காத்திருக்கலாம்”. நல்லது, அது ஆயிரவருட அரசாட்சியாக இருக்கக்கூடும், ஆனால் அங்கே நமக்கு எந்த ஒரு சுகமளித்தலும் மற்றெந்த காரியங்களும் அவசியப்படாது. அது அடுத்து வரக்கூடிய காலமாயிருக்கிறது. இப்பொழுது நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது நீங்கள் தேவனுடைய குமாரர்களாய் இருக்கிறீர்கள். இப்பொழுது நாம் ஒருமித்து உன்னதங்களில் வீற்றிருக்கிறோம், நாம் இருப்போம் என்றல்ல. இப்பொழுதே, இந்த மதியவேளையில், சரியாக இப்பொழுதே நாம் தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாய் ஒருமித்து கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வீற்றிருக்கிறோம். அதுதான் உண்மை. பாருங்கள். அப்படியானால் எல்லா காரியங்களும் நமக்கு கைக்கூடிவரும். 42எனவே அந்த சிறிய கட்டுகளும், இருளான நிழல்களும் ஒழிந்து விலகிப் போகும்போது, அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் உடனடியாக உள்ளே வந்து, அற்புதங்களை நடப்பிப்பார். ஓ, அதினால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஆனால் அங்கே அந்த சிறிய சந்தேகம் இருக்கிறது. அது, ஒரு மனிதன் ஆற்றைக் கடப்பதை போன்று இருக்கிறது என்று ஒரு சகோதரனிடத்தில் நான் இக்காலையில் பேசிக் கொண்டிருந்தேன். மக்கள் அநேக முறை இங்கே பீடத்தண்டையில் வந்து, “ஓ, சகோதரன் பிரான்ஹாம் எனக்கு முழுவிசுவாசம் இருக்கிறது” என்கிறார்கள். எனவே இப்பொழுது, அவர்கள் உத்தமத்தோடு அதை விசுவாசிக்கிறார்கள். தரிசனம் இன்னும் அதுபோன்ற காரியங்கள் மூலம், தேவனுடைய வரத்தைக் கொண்டு எங்கே பிழை இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது சாத்தியமாயிருக்கிறது. பாருங்கள், காரணம் தேவன் அதை அநேக நேரங்களில் அதை வெளிப்படுத்துகிறார். இப்பொழுது நீங்கள் கூறலாம்,“எனக்கு விசுவாசம் இருக்கிறது”, என்று. முதலாவது காரியம், நீங்கள் விசுவாசத்திற்கான அடிப்படையை பெற்றிருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தையாய் இருக்கிறது. சரி, எனவே அந்த மனிதன் வேதாகம பள்ளிக்குச் சென்று, வேத சாஸ்திரத்தை கற்றுக் கொள்கிறான். அவன் வேதாகமத்தை படித்து, “தேவன் அதை கூறியிருக்கிறார். ஆம், அதை நான் நம்புகிறேன்”, என்கிறான். அதை அவன் இங்கே தன்னுடைய சிந்தையில் (mind) விசுவாசிக்கிறான். ஆனால் அதே சமயத்தில் அவனுக்கு உள்மனது (sub conscious) என்ற ஒன்று இருக்கிறது. அந்த உள்மனது இதனோடு ஒத்துப் போகாமல் இருக்கிறது. ஏனெனில் அவன் அதை நம்பத் தொடங்கும்போது, அது நடக்காது என்கிற ஒரு சிறிய அச்சம் அவனுக்கு இருக்கிறது. அது அவ்விதமே நடக்காமல் போகிறது. அது சரியே. 43அது உண்மைதான் நண்பர்களே. நான் இதுவரைக்கும் இருபத்தியோரு ஆண்டுகள் ஊழியக்காரனாயிருந்து, வேதாகம வசனங்களை எனக்குத் தெரிந்த ஒவ்வொரு வழியிலும் ஆராய்ந்திருக்கிறேன். ஆகவே நான் எதை பேசுகிறேனோ அதைக் குறித்து நான் மிக ஜாக்கிரதையுள்ளவனாய் இருக்கவேண்டும். அது, ஒரு மனிதன் கடல் கடந்து போகிறதைப் போல் இருக்கிறது. அந்த மனிதன் கடல் கடந்து போகிறான். அந்த கப்பலை ஓட்டுகிற அந்த மனிதனுக்கு, தான் எங்கே போகிறோம் என்பதை அறியான். அவன் அந்த கப்பலின் அடிபாகத்தில் இருக்கிறான். அவன் அந்த கப்பலின் பொறியாளனாயிருக்கிறான். ஆனால் உச்ச பாய் மரத்தில் இருக்கும் கண்காணிப்பு அல்லது திசைஅறிவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் தளத்திலிருக்கும் மனிதனிடத்திலிருந்து கப்பலின் மேல்தளத்தில் இருக்கும் இன்னொரு மனிதன் செய்தியை பெற்றுக் கொண்டு, கப்பலின் கீழ் தளத்திலிருக்கும் இந்த மனிதனுக்கு கட்டளையிடுகிறான். இவன், “இடப்பக்கம் திரும்பி இரண்டு கடல் மைல்கள் செல்” என்று (கப்பலின் அடிபாகத்திலிருக்கும்) இவனுக்கு அறிவிப்பான். இப்பொழுது, கப்பலின் அடிபாகத்திலிருக்கும் இந்த மனிதனுக்கு தான் எங்கே போகிறோம் என்பதை அறியமாட்டான்; அவன் வெறுமனெ கட்டளையை பெற்று அந்த கப்பலின் இயந்திரத்தை இயக்குகிறவனாயிருக்கிறான். சரி, ஒருவேளை இவன், வலது பக்கம் திரும்பி இரண்டு கடல்மைல்கள் செல் அல்லது ஒன்றுமே சொல்லாமல் இருந்தாலும் அது காரியமல்ல. ஆனால் இங்கே மேல் தளத்தில் இருப்பவன் “முன்னோக்கி செல்” என்று சொல்லும் போது, இவன் பின்னோக்கி செல்லும்படிக்கு இயக்குவானாகில், அது (கப்பல்) பின்னோக்கி செல்லத் துவங்கும். அதன் பின் அவர்களால் அந்த துறைமுகத்தை விட்டு வெளிவரவே முடியாது. 44சபையிலும் அவ்விதமாகத்தான் காரியம் இருக்கிறது. நீங்கள் இந்த வழியிலும், அந்த வழியிலும் மற்றும் வெவ்வேறு வழிகளில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் இப்பொழுது, கண்கானிப்பு அல்லது திசை அறியும் இடத்தில் (crow vest) இருப்பவர், 'தொடர்ந்து நேராக செல்லவும்“ என்று சொல்லும்போது அதைக் கேட்டு மேல் தளத்தில் இருப்பவரும் தொடர்ந்து நேராக செல்லவும்… என்று சொல்லும்போது, அதையே கீழ்தளத்தில் இருப்பவரும் கேட்டு தொடர்ந்து நேராக செல்வோம்… என்று சொல்லும் பட்சத்தில்,அப்பொழுது அவன்(கப்பல்) துறைமுகத்தை விட்டு நகரத் துவங்குவான். அவ்விதமாகவே தேவன், “அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்” என்று கூறியிருக்கிறார். அதையே ஒரு மனிதன் தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”, என்று கூறும்போது, உடனடியாக அவனுடைய உள்மனதும் “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்” என்று பிரதியுத்தரம் சொல்லும். கவனியுங்கள், அப்பொழுது ஏதோ காரியம் நடந்தே தீரும். நீங்களும் முன்னோக்கி போகத் துவங்குகிறீர்கள். அதற்குப் பிறகு அதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் முழு இசைவுடன் (harmony) இருக்கிறீர்கள். ஒரு அலையும், ஆம் எப்பேற்பட்ட எதிர்ப்பலைகள் வந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. அது உங்களுடைய விசுவாசத்தை எதிர்த்து நிற்க முடியாது.அதையெல்லாம் தாண்டி நீங்கள் போய்க் கொண்டிருப்பீர்கள். அது சரிதான். பாருங்கள், எனவே நீங்கள் ஒவ்வொன்றையும் தேவனுடைய வார்த்தையின் இசைவில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவன், “ஆமாம், அந்த காரியம் மிகவும் கடினமாயிருக்கிறது அல்லது இது, அது,” என்று கூறுவானேயாகில், அது இங்கே நீங்கள் நம்ப முயற்சிக்கிறீர்கள், ஆனால் அங்கே உள்மனதில் நீங்கள் அதைக் குறித்து சற்று பீதி (பயம்) அடைந்திருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். 45அது இக்காலையில் நான் ஒரு சீமாட்டியினிடத்தில் கூறின விதமாக இருக்கிறது. எப்படியெனில் நீங்கள் காலை உணவிற்காக இறைச்சியை வறுத்துக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அதிலிருந்து தெறித்தகொழுப்பு உங்கள் கரத்தில் படும்போது, முதலாவது காரியம், அது உங்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்துகிறது. உடனடியாக நீங்கள் உங்கள் கரத்தை பின்னுக்கு எடுத்து, “அங்கன்டின் (நெருப்பு பட்ட புண் ஆறுவதற்கு உபயோகிக்கும் தைலம் - மொழிபெயர்பாளர்) (Unguentine) எங்கே?” என்று, எவ்வளவு துரிதமாக கேட்க முடியுமோ அவ்வளவு துரிதமாக அதை கேட்கிறீர்கள். அந்த காரணத்தினிமித்தமே அது உங்களை (கரத்தை) சுடுகிறது. என்னால் அதை நிரூபிக்க முடியும். நீங்கள் பயப்படுகிற பயமே உங்களுக்கு தீக்காயத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் பெற்றிருக்கிற பரிசுத்த ஆவி, அது உங்கள் சரீரத்தில் மேலாட்சி செய்கிறது. ஆம், அந்த பெரிய பாம்பு பவுலுடைய கரத்தை பற்றிப் பிடித்துகொண்டபோது, அதைக் கண்டு அவன் கொஞ்சம் கூடபயப்படவில்லை. அதை அவன் அப்படியாக பார்த்து, நெருப்பிலே உதறிப்போட்டு, தொடர்ந்து போய் இன்னும் கொஞ்சம் குச்சிகளை கொண்டு வந்தான். அது அவனை கொஞ்சம்கூட பயப்படுத்தவில்லை. இயேசு, “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” என்று கேட்டார். பேதுரு தண்ணீர்மேல் (கடல்) நடந்து வந்தான். அவன், கடல் அலைகள் எதிர்த்து வருகிறதை காணுமட்டும் நன்றாக நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் அதைக் கண்டு பயந்தபோது, அவன் மூழ்கத் துவங்கினான். உடனே இயேசு வந்து, அவனை பிடித்து தூக்கி, “ஓ, அற்பவிசுவாசியே, ஏன் நீ பயப்பட்டாய்”, என்றார். பயம், ஆம் அது நடக்காது என்று நீங்கள் பீதி அடைகிறீர்கள். ஒரு துளி கூட நீங்கள் பயப்படவேண்டாம்; முன்னோக்கி செல்லுங்கள். தேவன் அவ்விதமாக உரைத்திருக்கிறார், அது அதை செய்து முடிக்கும் (நிறைவேறும்). 46அன்பை பெற்றுக் கொள்ளாமல் அதை நீங்கள் செய்ய முடியாது. பூரண அன்பு எல்லா பயத்தையும் புறம்பே தள்ளும். மக்கள் மத்தியில் நடத்தப்படும் ஊழியங்களில் என்னுடைய வெற்றிக்கு பங்களிப்பாக ஏதோ ஒன்றை நான் கூற வேண்டுமானால் அது இதுதான்: அதே சமயத்தில் மற்ற ஊழியக்காரர்கள் செய்வது போல என்னால் கூட்டங்களை சரியாக ஒழுங்கு முறைபடுத்தாமல், கூட்டங்களை துண்டிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். அநேக நேரங்களில் நான் கொடுக்கும் வாக்கை திரும்பப் பெற்று, இதையும் அதையும் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் தேவன் என்னை அப்படி செய்யும்படி செய்கிறார். ஆனால் ஒரு காரியம், அது நான் மக்களை நேசிக்கிறேன் என்பதே காரணமாகும். மக்களும் அதை அறிந்திருக்கிறார்கள். நீங்கள் மூன்று மாத குழந்தையை எடுத்துக் கொண்டீர்களானால் அதற்கு ஒன்றுமே தெரியாது. அதற்கு சிந்திக்கக்கூடிய மனம் இருக்கிறது. ஆனால் அது இன்னுமாக வளர்ச்சியடையாமல் இருக்கிறது. அதற்கு யார், என்ன, ஏது என்று ஒன்றும் தெரியாது. மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவர்களால் வெளிச்சத்தை பார்க்கமுடியும் என்றும், மற்றும் அவர்கள் உங்களுடைய கரத்தை பார்க்கலாம். ஆனால் அவர்களால் அதின் அசைவை மட்டுமே பின்தொடர முடியும். அவன் வெறுமனெ தன் குதிகால்களை உதைத்துக் கொண்டு, தன்னுடைய உரத்த சத்தத்தை கொண்டு கூச்சலிடுவான். நல்லது, இங்கே ஒரு கனிவான ஸ்திரீ வந்து, அவன் பக்கமாக கடந்து சென்று, “நல்லது, நல்லது, அன்பே”, என்று கூறுவாளானால், அவன் தொடர்ந்து குதிகால்களை உதைத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பான். அவனுக்கு அந்த ஸ்திரீ யார் என்று தெரியாது. அவனுக்கு வேறு யாரைப் பற்றியும் தெரியாது. 47ஆனால் அவனுடைய தாயார் அங்கே வந்து, அவன் மீது தன் கரங்களை வைக்கட்டும். அது அவன் அழுகையை நிறுத்திப் போடும். இப்பொழுது, அவனுக்கு அவன் தாய் யார் என்று தெரியாது. ஆனால் இவனுடைய சிறிய ஆவிக்கு இங்கே இந்த ஆவியினிடத்தில் ஏதோ காரியம் இருக்கிறது என்பதை அறியும். இன்னொரு நபர் எவ்வளவு அவனிடத்தில் அன்பு செலுத்தினாலும், வேறு யாராலும் அந்த தாயினுடைய அன்பை அவனுக்கு கொடுக்க முடியாது. அது தாயினுடைய அன்பில்லையா. அது சரிதானே? அவள் தன்னுடைய கரங்களை அவன் மீது வைத்தவுடன், அவன் அழுகையை உடனடியாக நிறுத்திவிடுவான். பாருங்கள் அவன் அதற்காக ஆயத்தமாய் இருக்கிறான். ஏனெனில் அந்த தாயினிடத்தில், அந்த குழந்தைக்கு கொடுக்கக் கூடியதும், தாயினுடைய அன்பைத் தவிர வேறொரு அன்பு இல்லை என்று அந்த குழந்தையின் சிறிய ஆவி அடையாளம் கண்டுக் கொள்ளக்கூடிய ஓர் அன்பானது அந்த தாயினிடத்தில் இருக்கிறது. வியாதியஸ்தர் மேல் கரங்களை வைக்கும்படிக்கு நமக்கு அவர் கட்டளையிட்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. அதிகமாக குதித்துக் கொண்டும், உதறிக் கொண்டும், தொல்லைக் கொடுக்கும் ஒரு குதிரையை எடுத்துக் கொள்ளுங்கள் மேற்கத்திய மக்களாகிய நீங்கள் அதை அறிந்திருக்க வேண்டும்.ஆனால் அதன் எஜமானனை அது இருக்கும் இடத்துக்கு அனுப்புங்கள், அவரும் அதின் மீது தன் கரங்களை வைத்து , “ஓஹா, பையனே”, என்று கூறுவாரானால், அது உடனடியாக அமைதியாகிவிடும். பாருங்கள், அது அன்பாயிருக்கிறது. 48நாம் தேவனை நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமா வோடும், முழு மனதோடும் அன்பு கூறுவதையும் மற்றும் நம்மை நாம் அன்பு கூறுவது போல மற்றவர்களை நாம் அன்பு கூறுவதையும், நம்முடைய அயலானை நாம் நம்மில் அன்பு கூருவது போல அவர்களிடத்தில் அன்பு கூறுவதையும், மக்களால் அதை உண்மையிலேயே உணரமுடியும். அதை நீங்கள் நடித்துக் காண்பிக்க முடியாது. நீங்கள் அதை நம்பும்படிக்கு செய்யவும் முடியாது. ஏனெனில் அதை அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஒரு தடவை லிங்கன், “கொஞ்ச மக்களை கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் எல்லா மக்களையும் எல்லா நாட்களும் நீங்கள் ஏமாற்ற முடியாது” என்று கூறினார் என்று நான் நம்புகிறேன். அது சரியே. நீங்கள் மக்களை நேசிக்கக்கூடிய அன்பை உங்கள் இருதயத்தில் பெற்றிருப்பீர்களானால், அதை அவர்கள் அறிவார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களை புறக்கணித்தாலும் அல்லது வேறு எதையாவது செய்தாலும், அதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். அதை அவர்களால் உணரமுடியும் அவர்கள் அறிந்திருக்கக்கூடிய ஓர் அன்பை, மக்களுக்குள்ளாக செலுத்துவது என்பது, நாம் அழைப்பது போல, அது வேறொரு பரிமானமாயிருக்கிறது. அதை அவர்கள் நம்புவார்கள். ஆம் அதை நீங்கள் விசுவாசிக்கும் போதுதான் உங்களால் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். 49இப்பொழுது, உலகில் மற்ற இடங்களில் இருப்பது போல, இன்றைக்கு பீனிக்ஸ்க்கும் அதுதான் தேவையாய் இருக்கிறது. நம்முடைய அமெரிக்க பட்டணங்களை கவனிக்கும் போது, நாம் தேவனை அதிகமாக புறக்கணித்துவிட்டோம். நாம் தேவனை அவ்வளவாக புறக்கணித்ததற்கான காரணம் என்னவெனில் நாம் ஒருவரையொருவர் புறக்கணித்திருப்பதுதான். பாருங்கள். எனவே நாம் ஒருவரிலொருவர் ஒருமனப்பட்டிருக்கும் போது, அப்பொழுது தேவன் இறங்கி வருவார். நாங்கள் ஆப்பிரிக்கா, இந்தியா அல்லது அநேக தீவுகளுக்கும் இன்னும் வெவ்வேறு இடங்களுக்கும் செல்லும்போது, அவர்கள் மத்தியில் ஒரு சிறிய எளிமையான அற்புதம் நடக்கும்போது... அப்பொழுது அவர்களை கவனிக்கவேண்டும். ஆனால் இம்மதிய வேளையில் இங்கு இருக்கும் அல்லது மற்ற வெவ்வேறு இடங்களில் இருக்கும் மக்களை நீங்கள் கவனிப்பீர்களானால்... அவர்கள், “அது மிகவும் அருமை. அதற்காக நாங்கள் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்”, என்று கூறி அதே மெத்தனத்தோடு வீட்டுக்கு திரும்பி செல்வார்கள். 50ஆனால் அதே காரியம் அஞ்ஞானிகள் மத்தியில் நடக்கட்டும், முழு தேசமே தேவனிடத்தில் வந்துவிடும். அங்கிருக்கிற ஒவ்வொருவரும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் உடனடியாக வந்துவிடுவார்கள். அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள் மற்றும் அவர்கள் தாழ்மையானவர்கள். எனவே இப்பொழுது, அதைத் தான் நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். நமக்கிடையே இருக்கும் எல்லா வேறுபாடுகளையும் தகர்த்தெறிந்து, நம்மை நாம்... இப்பொழுது நீங்கள் அதை நடித்துக் காண்பிக்கமுடியாது. அதுதாமே உள்ளிருந்து வரவேண்டியதாய் இருக்கிறது நினைவில் கொள்ளுங்கள். அது உள்ளிருந்துதான் வருகிறதா என்று பரிசுத்த ஆவியானவருக்கும் தெரியும். நம்முடைய எல்லா வேண்டாவெறுப்பையும் தகர்த்தெறிந்து, “நான் தேவனை நேசிப்பேன். என்னுடைய எதிரிகளையும் கூட நான் நேசிப்பேன்”, என்று கூறி வெளியே புறப்பட்டு செல்வோமாக. உங்களைக் குறித்து எவராவது எதையாவது கூறினாலும், அது உங்களை ஒருபோதும் தொல்லைப்படுத்தும்படிக்கு விட்டுவிடவேண்டாம். அந்த அருமையான உணர்வை நீங்கள் பாழ்படுத்த வேண்டாம். என்னே‚ முன்னோக்கி செல்லுங்கள். அவர்கள் என்ன கூறினாலும் அவர்களிடத்தில் அன்பு கூருங்கள். ஆமென். 51மக்களை நீங்கள் முற்றிலும் வெறுப்பதினால் அது உங்களுக்கு என்ன நன்மையை செய்யப்போகிறது. எவ்வளவுதான் கடினமானவர்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் அன்பு கூருங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் நேசியுங்கள். ஏனெனில் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயம் கொண்டு வாங்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பாவிகளானாலும், பரிசுத்தவான்களானாலும் சரி... அப்பொழுது நீ அவர்களை தேவனுக்கென்று சம்பாதித்துக் கொள்ள முடியும். காரணம் நீ அவர்களை உண்மையிலேயே நேசிக்கிறாய் என்று அவர்கள் உணர்வார்கள். பாருங்கள். அதுதான் இன்று நமக்குத் தேவை, அவ்விதமாக நீங்கள் நினைக்கவில்லையா? ஆம் ஐயா. கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு மனிதன் என்னிடத்தில் வந்தான், அவன் ஒரு அருமையான மனிதன். அவன், “சகோதரன். பிரான்ஹாம், நான் எப்படி இரட்சிக்கப்பட வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்கும்படிக்கு வந்திருக்கிறேன்”, என்றான். “இரட்சிக்கப்படும்படிக்கு நான் பல வருடங்களாக முயன்று வருகிறேன்”, என்றான். நான், “சரி”, என்றேன். அவன், “நல்லது, திரு. பில்லி கிரஹாம் என்ற ஒரு பிரசித்திபெற்ற பிரசங்கியார் இருந்தார். அவரை உங்களுக்குத் தெரியுமா?”, என்றான். நான், “அவரை எனக்குத் தெரியும். மிகவும் அருமையான மனிதன்”, என்றேன். அவன், “நல்லது, நான் அவருடைய கூட்டத்திற்கு சென்றிருந்தேன்”, என்றான். அவர் (பில்லி), “கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள்”, என்றார். 52அவன், “சகோதரன் பிரான்ஹாம், நானும் என்னால் முடிந்த அளவுக்கு கரத்தை உயர்த்தினேன். பின்னர் நான் எழுந்து நின்றேன், அவர்களும் எனக்காக ஜெபம் செய்தார்கள். ஆனால் எந்த ஒரு மாறுதலும் எனக்கு ஏற்படவில்லை”, என்றான். அதற்கு பின் “பழைய கால மார்க்கம்… (Old-time Religion) என்று அழைக்கப்படும் பழைய பாணி கூடார கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே அவர்கள், ”நீ சத்தமிடுமளவுக்கு போதுமான சந்தோஷத்தை பெற வேண்டும்“, என்றார்கள். எனவே அங்கே நான் உறக்கசத்தம் போடும் வரைக்கும் ஜெபித்தேன். பிறகு நான் வெளியே வந்து தொடர்ந்து அழுது கொண்டும், சத்தம் போட்டுக் கொண்டும் இருந்தேன். ஆனால் அது எனக்கு எந்த ஒரு பிரயோஜனமும் செய்யவில்லை. அதற்குப் பிறகு நான் நமக்கெல்லாருக்கும் தெரிந்திருக்கும் பிரசித்திபெற்ற மனிதனின் கூட்டத்திற்கு சென்றேன். அவரும், “நீ சந்தோஷமடைந்து, சத்தம் போட்டு அந்நியபாஷையில் பேசும் வரைக்கும் இங்கேயே தரித்திரு”, என்றார். நானும் அவ்விதமே செய்தேன். ஆனால், “அது எனக்கு எந்த ஒரு பிரயோஜனமும் செய்யவில்லை”, என்றான். மேலும் அவன், “நீங்கள் இதற்கு என்ன கூறுகிறீர்கள்”, என்றான். 53நான், “சகோதரனே, ஒவ்வொருவரும் உங்களுக்கு உண்மையை தான் கூறினார்கள்... ஒவ்வொருவரும்” அது சரிதான். நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, கத்திக் கூச்சலிட்டு, சந்தோஷமடைந்து, அந்நிய பாஷைகளில் பேச வேண்டும் என்பதை நானும் விசுவாசிக்கிறேன். அந்த எல்லா காரியங்களும் உண்மைதான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் சகோதரனே, அதை தேடி நீங்கள் போகவில்லை, நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தேடி சென்றீர்கள். கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதென்பது ஏதோ கரங்களை உயர்த்தவேண்டும் அல்லது இவையெல்லாவற்றையும் செய்யவேண்டும் என்றில்லை, அது அந்த நபரை இருதயத்திற்குள் ஏற்றுக் கொள்வது. அதுதான் காரியம். அதன் பின்னரே அந்த நபரின் தன்மைகள் உங்களிலிருந்து வெளிவரும். முதலாவது, முதலில் பெறவேண்டிய காரியத்தை முதலில் பெறவேண்டும்; அது கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது, அது அதைப்பற்றி சாட்சி பகரும். மேலும் நான், “புகைபிடிப்பது, குடிப்பது, சீட்டாட்டம் ஆடுவது, விபச்சாரம் செய்வது அதெல்லாம் பாவம் அல்ல”, என்றும் அவனிடத்தில் கூறினேன். எனவே அன்றொரு இரவு இதை நான் கூறினபோது, வயது சென்ற ஒரு அருமையான மெத்தோடிஸ்ட் தாயார் எழுந்து நின்றார்கள். அப்பொழுது நான், “குடிப்பது அது பாவம் கிடையாது, புகைபிடிப்பது, சீட்டாடுவது பாவம் அல்ல”, என்றேன். அவள் எழுந்து, “அப்படியானால் பிரசங்கியாரே, எது பாவம் என்று எனக்கு கூறுவீர்களா”? என்றாள். நான், “அது அவிசுவாசமே”, என்றேன். அது சரிதான். குடிப்பதோ, புகைபிடிப்பதோ இன்னும் அது போன்ற காரியங்களை நீங்கள் செய்வதற்கான காரணம், நீங்கள் அவிசுவாசியாக இருப்பதினால் தான். அவையெல்லாம் அவிசுவாசத்தின் தன்மைகள். அதுதான் அவைகளை செய்யும்படிக்கு செய்கிறது. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் அவைகளை செய்ய மாட்டீர்கள். நீங்கள் குடிப்பதையோ, புகைபிடிப்பதையோ, புகையிலை மெல்லுவதையோ, இன்னும் விபச்சாரம் செய்வதையோ விட்டுவிடுவதினால் நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது. அதை நீங்களே செய்ய முடியும். அதுசரிதான். நல்லது. ஆனால் பிரதான காரியம் என்னவெனில், கிறிஸ்து இயேசுவாகிய அந்த நபரை நீங்கள் ஏற்றுக் கொள்வதாகும். ஆமென். அப்பொழுது அது அதினுடைய கனியை தானாக கொடுக்கும். 54அதெப்படியெனில் ஒரு சோள தானியமானது நிலத்திற்குள் புதைக்கப்படும்போது அது ஒரு கொடியாகவோ, மருளுமத்தையாகவோ, வெள்ளை ஊமத்தையாகவோ, சப்பாத்திக்கள்ளியாகவோ வெளி வராது.ஏனெனில் அதற்குள்ளாக சோள ஜீவன் இருப்பதினால், அது சோளத்தை மட்டுமே உற்பத்திசெய்யும். அவ்விதமே ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறக்கும்போது அவன் ஒரு புது சிருஷ்டியாகிறான். அவன் தேவபக்தி, தேவ அன்பு மற்றும் ஆவியின் கனிகளை பிறப்பிப்பானே தவிர வேறொன்றையும் உற்பத்தி செய்யமாட்டான். ஏனென்றால் அது ஒரு ஜீவனாக இருக்கிறது. நாம் தூய்மையுள்ள தேவனுடைய வித்தினால், அழிவில்லாத தேவனுடைய வித்தினால் விதைக்கப்படுகிறோம். எனவே, அது அதினுடைய அதே அசலான தன்மையை உற்பத்தி செய்தாக வேண்டும்.ஆமென். நான் அதிக சத்தமாக பேசவில்லை என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள் அது அதின் ஜீவனை அதற்குள் பெற்றிருக்கிறது. ஒருசோள விதையானது நிலத்திற்குள் புதைக்கப்படும்போது, அது தாமே மஞ்சள்நிற சோளமாக இருக்கும்பட்சத்தில், அது மஞ்சள் நிற சோள தானியத்தையே உற்பத்தி செய்யும். ஒருவேளை அது கோதுமையாக விதைக்கப்படும்போது, அது கோதுமையைத்தான் உற்பத்தி செய்யும். அவ்விதமே ஒரு வாற்கோதுமை பயிரும் வாற்கோதுமையைத் தான் கொடுக்கும். அது எதுவாயிருந்தாலும் அல்லது அது எந்த வித்து என்று அழைக்கப்படுகிறதோ, அது சரியாக அதை தான் உற்பத்திசெய்யும். 55அது, இங்கே நீங்கள் யாவரும் அதிகமாக வளர்க்கும் சிறிய கிச்சிலி உள்ளிட்ட பழமர வகையைப் போன்று இருக்கிறது. இவை உலகிலேயே சிறப்பானது... என்று நான் எண்ணுகிறேன். இந்த நேவல் (சுவையான, விதையில்லா வகை ஆரஞ்சு) மற்றும் ஆரஞ்சுகள் இன்னும் இது போன்றவைகளை நீங்கள் இங்கே வளர்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் அங்கே வெளியே வைத்திருக்கும், கிட்டத்தட்ட அந்த அளவுக்கு பெரிதானஅந்த நேவல் மரம், அந்த மரத்தில் வளரக்கூடிய ஒவ்வொரு கூடை ஆரஞ்சுகளும் ஏற்கனவே அதற்குள்ளாக இருக்கிறது. அப்படி அவை அதற்குள்ளாக இல்லாதபட்சத்தில், அவை எங்கிருந்து வருகிறது? நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்க விரும்புகிறேன். எனக்கு விவசாயம் பற்றி அவ்வளவாக தெரியாது. ஒரு சாதாரன ஆரஞ்சு மரம் அது தன்னுடைய வாழ்நாளில் எத்தனை ஆரஞ்சு கூடை பழங்களை கொடுக்கிறது என்று எனக்கு தெரியாது, ஒருவேளை நூற்றுக்கணக்கான கூடை ஆரஞ்சுகளை அது கொடுக்கலாம். “ஆனால் பிரசங்கியே, எனக்கு சொல்லுங்கள் அந்த மரத்தில் வளரக்கூடிய நூற்றுக்கணக்கானஆரஞ்சு கூடை பழங்கள், அந்த சிறய மரத்தில் எங்கிருந்தன? சரி, இப்பொழுது, “என் சகோதரனே எனக்கு சொல்லுங்கள் அவை அந்த மரத்தில் இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து வந்திருக்கும்”. உண்மையிலேயே அவையாவும் அந்த மரத்திற்குள்ளாகத்தான் இருந்தன. 56எனவே நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில் அந்த சிறிய மரத்தை நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டியதுதான். அது சரிதானே? அது போய் அந்த தண்ணீரை எடுத்துகுடிக்க வேண்டியதுதான், அந்த தண்ணீரை குடிப்பதினால் அது வளர்கிறது. அது சில இலைகளை வெளியே தள்ளுமட்டும், சில மொட்டுகளை வெளியே தள்ளுமட்டும், சில ஆரஞ்சுகளை வெளியே தள்ளுமட்டும் அது தண்ணீரை தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான். எனவே அந்த மரம்செய்ய வேண்டிய ஒரே காரியம் அதற்குள்ளாக இருக்கும் இலைகளை வெளியே தள்ளுமட்டும் தண்ணீரை குடித்துக் கொண்டே, குடித்துக் கொண்டே, குடித்துக்கொண்டே, குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். அது சரிதானே? அவ்விதமே ஒரு மனிதனும் தேவனுடைய ஆவியினால் பிறந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும்போது, இந்த ஜீவிய யாத்திரையில் அவனுக்கு தேவையான யாவும், சரியாக அவனுக்குள்ளாக வைக்கப்பட்டிருக்கிறது. எனவே அவன் செய்யவேண்டிய ஒரே ஒரு காரியம் தெய்வீக சுகத்தையும், தேவனுடைய வல்லமைகளையும் வெளியே தள்ளுமட்டும் கிறிஸ்து இயேசுவாகிய அந்த வற்றாத ஜீவ ஊற்றிலிருந்து தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கவேண்டியது தான். அவன் இயேசு கிறிஸ்துவாகிய அந்த வற்றாத நித்தியகால ஜீவ ஊற்றிலிருந்து குடித்துக் கொண்டே இருப்பதினால் அவன் அதை வெளியே தள்ளுகிறான். ஆமென். 57இம்மதிய வேளையில் நாம் எதிர்பார்ப்புகள் என்பதின் பேரில் இடைபட போகிறோம். நான் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் வீட்டுக்குப் போய், திரும்பி வர வேண்டியதாய் இருக்கிறது. ஒரு சிறிய செய்தி, 'எதிர்பார்ப்புகள்' (expectations.). இப்பொழுது, நாம் நம்முடைய இருதயங்களில் இந்த 'எதிர்பார்ப்புகள்' என்ற இந்த எண்ணத்தின் மேல் நிலைத்திருக்கும்படி நான் விரும்புகிறேன். நீங்கள் எதை எதிர்பார்க் கிறீர்களோ அதையே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் இந்த சீமாட்டியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவள் அந்த மலை நகர்ந்து போகும்படிக்கு ஜெபித்து, அடுத்த நாள் காலையில் எழுந்து, ஜன்னலை திறந்து, “ஆம், நான் எதிர்பார்த்தபடி அது அங்கேயே தான் இருக்கிறது”, என்றாள். ஆம், அது அங்கேயே இருக்கும் என்று அவள் எதிர்பார்த்ததுதான் அதற்குக் காரணமாய் இருக்கிறது. அது சரிதான். தேவன் நமக்கு பரிசுத்த ஆவியின் ஒரு பெரிய பொழிதலை (out pouring) கொடுக்கப் போகிறார் என்று உங்கள் இருதயம், ஆத்துமா, சரீரம் மற்றும் சிந்தையின் ஆழத்திலிருந்து வரக்கூடிய எதிர்பார்த்தலை நீங்கள் விரும்புகிறீர்கள். அது நம் அருகில் இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அதை தேவன் நமக்கு கொடுக்கும்படி விருப்பமும், ஆயத்தமுமாய் இருக்கிறார். 58எனவே, நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ, அதைத் தான் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் இந்த கூட்டத்துக்கு வந்து, “நான் இந்த கூட்டத்தில் சில குறைகளை கண்டுபிடிக்கப் போகிறேன், அந்த பிரசங்கியினிடத்திலும் சில குறைகளை கண்டுபிடிக்கப்போகிறேன் என்று நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்”, என்று கூறுவீர்களானால், கவலைப்பட வேண்டாம், நிச்சயம் நீங்கள் குறைகளை கண்டுபிடிப்பீர்கள். பிசாசு உங்களுக்கு நிறைய குறைகளை காண்பிப்பான். ஆம் ஐயா. நீங்களும் திரும்பிபோய், “ம்ம், ம்ம்ம். நான் எதிர்பார்த்த மாதிரியே இருந்தது. அது கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருந்தது. உ-ஊ...” என்பீர்கள். அவர் பெதஸ்தா குளத்தண்டையில் அங்கிருக்கும் நொண்டி, விந்தி நடப்பவன், குருடர், சூம்பி போனவர் போன்ற முடமானவர்கள் மத்தியில் கடந்து போனபோது, அதே கூட்டம்தான் இயேசுவினிடத்திலும் குறை கண்டுபிடித்தது. அவர் ஒவ்வொருவரையும் கடந்து சென்று, ஒருவரையும் சுகப்படுத்தாமல், அவர்களெல்லாரையும் தாண்டிச் சென்று, படுக்கையில் இருக்கும் ஒரு மனிதனை மட்டும் சுகப்படுத்தி, அவ்விடத்தை விட்டு கடந்து சென்றார். அதைக் கண்ட அந்த யூதர்கள், “உ-ஊ, இவன் சுகமளிப்பவனென்றால், இவர்களையும் அவன் சுகமாக்கட்டும்”, என்றார்கள். பாருங்கள். 59நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதைத்தான் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். ஆனால் நீங்கள் கூட்டத்துக்கு தேவனுடைய மகிமை அசைவாடுவதையும், தேவனுடைய வல்லமையையும், பாவிகள் இரட்சிக்கப்படுவதையும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதையும் வியாதிகள் சுகமடைவதையும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்து வருவீர்களானால், அப்பொழுது தேவன் உங்களுக்கு காண்பிக்க போவதை கவனியுங்கள்.ஆம் ஐயா. பாருங்கள், உங்களுக்குள்ளாக நீங்கள் ஒரு சிருஷ்டிகராக இருக்கிறீர்கள். நீங்கள் எத்தனை பேர் மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள், 'ஆமென்', என்று சொல்லுங்கள். (சபையார், 'ஆமென்' என்கின்றனர்) உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சிருஷ்டிகராக இருக்கிறீர்கள் என்று. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள்; நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாகவும், தேவனுடைய சந்ததியாகவும், தேவனுடைய ஒரு குமாரத்தியாகவும் இருக்கிறீர்கள். அது சரிதானே? அப்படியானால் நீங்கள் ஒரு சிருஷ்டிகராக இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் எப்பொழுதாவது இப்படிப்பட்டமக்களை கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் அருமையான மக்கள், ஏதோ அவர்களுக்கு ஆதரவாக கூறும்படிக்கு இதை நான் கூறவில்லை. அவர்கள் அருமையான மக்கள்தான், ஆனால் அவர்கள் சமூகத்தில் கொஞ்ச நேரம்கூட நிற்க கூடாத அளவுக்கு அவ்வளவு கடினமாக இருக்கும். அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அருமையான மக்கள் தான், ஆனால் அவர்கள் உருவாக்குகிற சூழ்நிலை (atmosphere) தான் அதை அப்படி செய்ய வைக்கிறது. அதே சமயத்தில் இன்னொரு வகை மக்களோடு நீங்கள் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிற வேறு கூட்ட மக்களையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது சரிதானே? அது எப்பொழுதும் அவர்களை சுற்றி இருக்கும் ஒரு சூழ்நிலையாக இருக்கிறது. அப்படி அதை செய்ய வைப்பது, அது எப்பொழுதும் அவர்களை சுற்றி இருக்கிற சூழ்நிலைதான். இப்பொழுது, என்னுடைய மனைவி இங்கே பின்னால் உட்கார்ந்திருக்கிறார்கள், இதை அவர்கள் அறியார்கள், அவர்கள் இங்கே எங்கேயோ இருக்கக்கூடும். எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாள் கடந்து போகும்போது என்ன நடக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியும். அது மக்கள் வருவதும், போவதுமாக இருக்கும். எனவே சில சமயங்களில் நான் (சமையலறைக்கு) உள்ளே செல்வேன், அங்கே பிள்ளைகளுக்கு சாப்பிடுவதற்கும் கூட இல்லாதபடி அந்த நாள் முழுவதும் எதுவும் சமைக்க கூடாதபடிக்கு நேரம் இல்லாததால், அங்கே உள்ளே சமையலறையில், எளிமையும் பரிதாபமான என்னுடைய மனைவி அழுது கொண்டிருப்பாள். அது அவ்விதமாகத்தான் இருக்கும். அங்கே அந்த சிறிய குழந்தை, கிட்டத்தட்டஇரண்டு வயதுடைய அந்த சிறிய பெண் சாராவும், ரெபேக்காளும் இருப்பார்கள். அவர்கள் அழுதபடி இருப்பார்கள். என்னுடைய மனைவியும் அழுதபடி என்னைப் பார்த்து, “பில் ஏறக்குறைய எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை”, என்பாள். முப்பத்திநான்கு வயதிலேயே நரைத்த முடியை பெற்றுக்கொண்டாள். எனவே நான், “நல்லது, இப்பொழுது, அது சரிதான், தேனே”, என்பேன். 60அதற்காக நான் அவளிடத்தில் எரிச்சலடைய மாட்டேன். இல்லை, 'அது சரி, தேனே' என்பேன். அவளிடத்தில், “அது மிகவும் கஷ்டமானதுதான், ஆனால் கவனி, நாம் தேவனுக்கு சேவை செய்கிறோம்” என்பேன். அப்பொழுது என் இருதயத்தில் எந்நேரமும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை கவனித்தீர்களா. நான் அங்கு வேறொரு சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களெல்லாரும், மனதளவில் தளர்ச்சியடைந்து நொறுங்கியிருந்தார்கள். எனவே, நான் என் இருதயத்தில் இப்படியாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். “ஓ, தேவனே, இப்பொழுது உம்முடைய பிரசன்னத்தையும், அன்பையும் சோர்வுற்றிருக்கும் பரிதாபமான என் மனைவி மீதாக கொண்டுவாரும்”. நான், “ஆம், அன்பே அது சரிதான். இதோ இங்கிருக்கிறதே அது என்ன”, என்று பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தேன். அவள், “நமக்கு இப்பொழுது சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லையே”, என்றாள். நான், “நல்லது, அடுத்த இரண்டுமணி நேரத்துக்கு யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன். நாம் சாப்பிடும்படிக்கு ஏதாயினும் செய்யலாம். நான் உனக்கு உதவி செய்கிறேன்“, என்பேன். எனவே நான் சட்டையை சுருட்டிவிட ஆரம்பிப்பேன். அதற்கு அவள், “இப்பொழுது, வாலிப மனுஷனே, கவனியும், நீங்கள் எனக்கு பாத்திரங்களை கழுவ உதவி செய்யலாம், ஆனால் உங்களால் சமைக்க முடியாது”, என்பாள். நான், “யாரால் சமைக்க முடியாது”, என்பேன். உங்களுக்கு தெரியும், அவ்விதமாக, நான் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பேன். “சரி, நான் உருளைக்கிழங்கு பொரிப்பதை இதுவரைக்கும் பார்த்திருக்கமாட்டாய். நான் அவைகளை உண்டு வளர்ந்தவன்”, என்று அவ்விதமான வகையில் பேசிக்கொண்டிருப்பேன். உங்களுக்குத் தெரியுமா? அவளுடைய ஒரு பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறிய புன்னகை தோன்றுவதை கவனிப்பேன். உங்களுக்குத் தெரியும், அதற்கு பிறகு நான் செய்யும் முதல் காரியம், நான் அவளருகில் சென்று, அவள் மீது என் கரங்களை போட்டு, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அவள் அறியாள், தொடர்ந்து நான், “தேனே, தேவன் உன் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. நான் உனக்கு சொல்கிறேன், இதை செய்யும்படிக்கு நான் உனக்கு உதவுவேன். அப்பொழுது என் இருதயத்தின் ஆழத்தில், ”கர்த்தாவே, எனக்குள்ளாக இருக்கும் உம்முடைய சமாதானத்தை இவளுக்குள்ளாக அனுப்பும். ஓ, தேவனே, இப்பொழுது என்னுடைய குடும்பத்தை அமைதிப்படுத்தும். நான் உம்முடைய ஊழியக்காரன்“, என்று சொல்லிக் கொண்டு இருப்பேன். 61முதலாவது அவள் என்ன கூறுவாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவள் “பில் உமக்கு ஒரு காரியம் தெரியுமா” என்பாள். உங்களுக்குத் தெரியும் அவளுடைய சிறிய, வழக்கமான கருமை நிற கண்கள் படுவேகமாக துடிக்கத் துவங்கும்.உங்களுக்குத் தெரியுமா? ஆம், நான் குழந்தையைப் பார்த்தபோது, அவள் தன்னுடைய தொகுப்புகளை (blocks - சிதறிப்போன பாகங்களை ஒன்று சேர்க்கும் விளையாட்டு) வைத்துக் கொண்டிருந்தாள். அதை வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது என்ன? அது ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகும். அல்லேலூயா. சகோதரனே, சகோதரர்களாகிய உங்களுக்கு நான் இதை கூறட்டும். சூழ்நிலைதான் அதை அப்படிச் செய்யச் செய்கிறது. அது மிகவும் சரி. கவனியுங்கள். முட்டையை குஞ்சு பொரிக்க செய்வது கோழி அல்ல; அது உருவாக்கும் சூழ்நிலைதான். ஆம் ஐயா. அது சரிதானே? 62நீங்கள் அதே முட்டையை ஒரு நாய்குட்டி கீழாக வைப்பீர்களானால் அவ்விதமே அது ஒரு கோழிகுஞ்சை பொரிக்கும். அடைகாக்கும் கருவிக்குள்ளாக வைத்தாலும்,அது அவ்விதமே கோழிகுஞ்சை பொரிக்கும். அது அங்கு உருவாக்கப்படும் சூழ்நிலையாயிருக்கிறது. அல்லேலூயா. தேவனுடைய வல்லமை அசைவாடக் கூடிய ஒரு சூழ்நிலை. ஆம், தேவன் இறங்கிவந்து அடையாளங்களையும், அற்புதங் களையும் நிகழச் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்து, ஒரே இசைவிலும் ஒரே இடத்திலும் கூட்டப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவியின் சூழ்நிலை நமக்கு அவசியமாயிருக்கிறது. ஆமென். நாம் அந்த அடைப்புக் குறிக்குள் கடந்து செல்வோமாக. விசுவாசத்தில் மேலேறிச் செல்வோமாக. இந்த மூன்று பரிமாணங்களை விட்டு விலகி அடுத்த ஒன்றுக்கு கடந்துபோவோமாக. 63நீங்கள், “கர்த்தாவே, நீர் உம்முடைய ஆசீர்வாதங்களை பொழிந்தருள்வீர் என்று நான் அதை முழுமையாக விசுவாசிக்கிறேன். எல்லா காரியங்களும் சரியாக போய்க் கொண்டிருக்கிறது. அதை நீர் இப்பொழுது மிகுதியாகவும், அதிகப்படியாகவும் செய்வீர் என்று எதிர்பார்க்கிறேன். அதை நான் எதிர்பார்க்கிறேன்”, என்று கூறுங்கள். ஒருவேளை நீங்கள் அங்கே வந்து, “சரி, அதைப் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறுவீர்களானால், ஆம், பாருங்கள், அது நீங்கள் அடுத்த நபரை புண்படுத்துகிறீர்கள். இப்பொழுது, நீங்கள் அவர்களில் ஒருவருக்கு அருகில் உட்கார்ந்து, “ஓ, கர்த்தாவே இப்பொழுது நீர் இவரை முற்றிலும் கிழித்துப்போடும், நான் பெரிய காரியங்களை எதிர்பார்க்கிறேன்”, என்று கூறுங்கள். பாருங்கள், அப்பொழுது அவ்விதமான எதிர்பார்க்குதல் மக்களுக்கு மத்தியில் அப்படிப்பட்ட ஒருமனப்பாட்டைகொண்டு வரும். பெந்தெகொஸ்தே நாளில் அதுதான் நடந்தது, அதுவே எந்த ஒரு தங்கு தடையின்றி பரிசுத்த ஆவியை கொண்டு வந்தது. அங்கே அவர்கள் மேலே சென்று, அவர்களெல்லாரும் ஒரே இடத்திலும், ஒரே இசைவிலும் வரும் வரைக்கும், அங்கே இரவு பகலாக பத்து நாட்களுக்கு தங்கி, அவர்கள் பெற்றிராத ஏதோ ஒன்றிற்காக தேவனை துதித்துக் கொண்டிருந்தார்கள். அது சரிதானே? 64அவர்கள் பரிசுத்த ஆவியை இன்னும் பெறாமல் இருந்தார்கள், இருப்பினும் பரிசுத்த ஆவிக்காக அவர்கள் தேவனை துதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் விதை வடிவில் பெற்றிருந்தார்கள். நான், “இங்கே ஓக் மரம் வளருமா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்? என்று கூறுவேனென்றால், அதற்கு நீங்கள், ”ஆம், அது வளரும் என்று நானும் யூகிக்கிறேன்“, என்பீர்கள். நான் உங்களுக்கு ஒரு ஓக் கொட்டையை கொடுத்து, “உங்களுக்கு ஒரு ஓக் மரத்தை கொடுக்கபோகிறேன்”, என்பேன். நீங்களும், “சரி, சகோதரன் பிரான்ஹாம், இங்கு இருக்கும் என்னுடைய கொல்லைப் புறத்தில் இந்த ஓக் மரம் வளருமா என்று நாங்கள் முயன்று பார்க்க விரும்புகிறோம்”, என்பீர்கள். மேலும் “அங்கே நீங்கள் வடக்கில் செய்வது போலசெய்து, சரியான வகை மண்ணில் விதையை விதைத்து, அது வளருகிறதா என்று பார்க்கப் போகிறேன்”, என்பீர்கள். அது சரி, “சரி சகோதரன். பிரான்ஹாம் நீங்கள் எனக்கு ஒரு ஓக் மரத்தை கொடுப்பதாக கூறுனீர்களே”, என்று கேட்கலாம். நான், “உங்களுக்கு அதைத்தான் கொடுத்திருக்கிறேன்”, என்பேன். அவர், “சரி, எப்படி நீங்கள் எனக்கு ஓக் மரத்தை கொடுத்ததாக கூறுகிறீர்கள்”. “நீங்கள் ஏற்கனவே ஓக் மரத்தை வைத்திருக்கிறீர்கள், ஆனால் அது விதை வடிவில் இருக்கிறது” என்பேன். நீங்கள் ஏற்கனவே ஓக் மரத்தை வைத்திருக்கிறீர்கள், ஆனால் அது விதை வடிவில் இருக்கிறது. அது சரிதானே? 65அந்த வழியில் தான் நாம் அதை பெற வேண்டியதாய் இருக்கிறது: அது நாமெல்லாரும் ஒரே இசைவிலும், ஒரே இடத்திலும் வரும்போது, அது அங்கே விதை வடிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தாங்கள் பெற்றுக் கொள்ளப் போகிற பரிசுத்த ஆவிக்காக அவர்கள் தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்வார் என்பதால் அதை அவர்கள் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசித்தார்கள், அவர்கள் இருந்த அந்த சூழ்நிலை பொருத்தமானதாக மாறும் வரைக்கும் அவர்கள் தேவனை தொடர்ந்து துதித்துக் கொண்டே இருந்தார்கள். அப்பொழுது பலமாக வீசுகிற காற்று பரத்திலிருந்து வந்து, அவர்கள் இருந்த வீட்டை நிரப்பினது. பாருங்கள், அவர்கள் இருந்த சூழ்நிலை பொருத்தமானதாக மாறினது. ஓ, வியாதியஸ்தர்... மட்டும், இங்கிருக்கும் ஒவ்வொரு முடமானவனும், ஒவ்வொரு குருடரும், ஒவ்வொரு வியாதியஸ்தரும், ஒவ்வொருவரும், நாமெல்லாரும் ஒரே இசைவில் வந்து, விசுவாசிக்க கூடிய சூழ்நிலையை நாம் பெற்றுக் கொள்ள மாட்டோமா‚ அதை நான் கடந்த வாரம் வுட் ரிவரில் (Wood River) பார்த்தேன், அங்கே ஒரு நபர் கூட... இல்லை. அங்கே அவர்கள் விட்டுச் சென்ற ஊன்று கோல்களையும், சக்கர நாற்காலிகளையும், கட்டில்களையும் எடுத்து குவியலாக போட்டு வைத்தார்கள். அங்கே நான் பிரசங்கபீடத்தில் நின்று இவ்வாறு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் எழுந்து, அவ்விதமாக ஒரு மூலையில் கூடினார்கள். அங்கே அவர்கள் இருந்த சூழ்நிலை (ஏற்ற) பொருத்தமானதாக மாறினது. 66ஓ, சகோதரனே, ஒரே இசைவிலும் ஒரே இடத்திலும் இருக்கக்கூடிய ஒரு காரியத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையை தேவன் நமக்கு அனுப்புவாராக. தேவனுடைய வல்லமை திரளாய் புறப்பட்டு வருவதாக. அந்த சூழ்நிலை ஏற்ற ஒன்றாக மாறி; ஒவ்வொரு அடைப்பையும், ஒவ்வொன்றையும் பின்னுக்கு தள்ளிப்போடட்டும். தேவனுடைய பிரமாணம் அசைவாட துவங்கட்டும். இங்கே அது அதிக நாட்களுக்கு முன்னதாக இல்லை... நம்மிடத்தில் ஒரு மனிதன் இருந்தார். இங்கிருக்கும் இந்த மின்சார பல்புகள், இதை கண்டுபிடித்த தாமஸ் எடிசன்தான் அந்த மனிதன். உலகம் உண்டான முதற்கொண்டு, உலகமானது முழுவதும் மின்சாரத்தினால் நிரம்பியிருந்தது. சரி இப்பொழுது, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, தேவன் இந்த உலகத்திற்கு மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்று ஒரு மனிதனை ஆயத்தப்படுத்தியிருந்தார். எனவே, நான் விசுவாசிக்கிறேன், தேவனுடைய திட்டமானது ஆயத்தமாய் இருக்கும் போது, ஒவ்வொன்றும் சரியாக அதினதின் நேரத்தில் நிறைவேறியே ஆகும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? ஏனெனில் அது அவ்விதமாக நடக்கும்படிக்கு அது முன் நியமிக்கப்பட்டிருக்கிறது. 67ஒரு சமயம், பெஞ்சமின் ப்ராங்கிளின் மீன் பிடிக்கச் சென்றபோது ஒரு காற்றாடியையும் கொண்டு சென்றார். அப்பொழுது, மின்னலானது காற்றாடியின் நூலை தாக்கினபோது, அதை அவர் பற்றிப் பிடிக்க நேர்ந்தது, ஆகவே அவர், “அதை நான் பெற்றுக் கொண்டேன், அதை நான் பெற்றுக் கொண்டேன்...”, என்று கத்திக் கொண்டே ஓடினார். அதை அவர் பெற்றுக் கொண்டார் தான், ஆனால் அவர் எதை பெற்றுக் கொண்டார் என்று அவர் அறியாமலிருந்தார். சரி, அவ்விதமாகத்தான் பெந்தெகொஸ்தே சபையினிடத்திலும் காரியம் இருக்கிறது, நீங்கள் அதை பெற்றுக்கொண்டீர்கள். ஆனால் நீங்கள் என்ன பெற்றுக்கொண்டீர்கள் என்று நீங்கள் அறியவில்லை. அதுதான் காரியம். அது சரியே. ஆம், நீங்கள் குருடருடைய கண்களை திறக்கும்படிக்கும், செவிடருடைய காதுகளை திறக்கும்படிக்கும், இன்னும் எல்லா காரியங்களையும் செய்யும்படிக்கும் போதுமான வல்லமையை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் தாறுமாறான சூழ்நிலையை உடையவர்களாய் உள்ளே வந்து அதை பெற்றுக் கொண்டீர்கள். அதை நாம் ஒருமனப்படும் சூழ்நிலையில் பெற்றுக் கொள்வோமாக. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரே இடத்திலும், ஒருமனப்பாட்டிலும் கூடிவரும் மக்கள் மீது பீறிட்டு வருவார். அவருக்கு பிறகு தாமஸ் எடிசன் வந்து, அவர், “இது வெளிச்சத்தை கொடுக்கும்”, என்றார். அவர் பத்தாயிரம் மின் கம்பிகளை கொண்டு முயற்சித்தார். அவர் சோர்ந்து போகவில்லை. அவர் ஒரு கப் காபியையும், இடையீட்டு ரொட்டியையும் (sandwich) வைத்துக் கொண்டு இரவு முழுவதும் முயற்சிப்பார். அவர் இந்த ஒன்றை (மின்கம்பி) எடுத்து, இதில் மின்சாரம் பாய்கிறதா என்றுமுயற்சிப்பார். இல்லையென்றால், அதை பக்கத்தில் வைத்துவிட்டு, இன்னொன்றை எடுத்து முயற்சிப்பார். அவ்விதமாக அதை முயற்சித்து, முடிவில் அதை அவர் கண்டுபிடித்தார். அவர் உலகத்திற்கு மின் ஆற்றலை (electricity) கண்டுபிடித்து கொடுத்தார். 68இப்பொழுது, எடுத்துக் காட்டாக, நீங்கள் இங்கே பின்னால் இருக்கும் இந்த பெரிய இருளான மலைகளுக்கு மேலாக போக நேரிடுமானால், அங்கே நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு காரிருளாக இருக்கும். ஒருவேளை நீங்கள் அங்கே இருக்கும் பாறையின் மீது மோத நேரிடலாம் அல்லது ஒரு பாம்பை மிதிக்க நேரிடலாம் அல்லது உங்களுக்கு என்ன நேரிடும் என்று நீங்கள் அறியாமலிருக்கலாம் அல்லது இந்த கீளாமான்ஸ்டரில் (Gila monsters) ஒன்றோ (பெரிய பருத்த விஷமிக்க பல்லி வகை பிராணி) அல்லது வேறெதாவதோ அங்கே படுத்துக் கொண்டிருக்கலாம். இருப்பினும் மின்சாரமானது அங்கே உங்களை சுற்றிலும் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் உங்கள் தொண்டை கரகரத்துப் போகுமட்டும், “ஓ, மின்சாரமே, மின்சாரமே, வெளிச்சத்தை பிரகாசிக்க செய். இங்கே இருந்து எப்படி வெளியே போக வேண்டும் என்று வழியை காட்டு. ஓ, நீ இங்கே இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். மின்சாரமே, நீ இங்கே இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். நீ இங்கே இருக்கிறாய் என்று விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. நீ இங்கே இருக்கிறாய் என்று எனக்கு தெரியும், எனவே வெளிச்சத்தை பிரகாசிக்க செய்” என்று கூச்சலிடலாம். நீங்கள் தொண்டை வறண்டு போகுமட்டும் கூச்சலிட்டாலும் அது வெளிச்சத்தை தராது. ஏன்? நீங்கள் மின்சாரத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றினால் மட்டுமே மின்சாரம் வெளிச்சத்தை கொடுக்கும். எனவே நீங்கள் மின்சார சட்டதிட்டத்தை பின்பற்ற வேண்டியதாயிருக்கிறது. 69இப்பொழுது இங்கே அந்தப் பக்கத்தில் கொப்பளிக்கிற ஒரு நீரூற்று இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயத்தில் இந்த பக்கத்தில் இருக்கும் ஒரு விளைச்சல், தண்ணீர் இல்லாமல் காய்ந்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் அந்த ஊற்றினிடத்தில் சென்று, “ஓ, தண்ணீரே, நீ அங்கே சென்று, என்னுடைய விளைச்சலுக்கு தண்ணீர் பாய்ச்சு” என்று கூறினாலும், அது அப்படிச் செய்யாது“. இல்லை. ஆனால் நீங்கள் புவி ஈர்ப்பு விசையின் பிரமாணத்தைப் பின்பற்றுவீர்களானால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.அது சரிதானே? சரி, இப்பொழுது கவனியுங்கள், இங்கே இந்த மதிய வேளையில் தேவன் இருக்கிறார். எனவே, நாம் அவருடைய வல்லமையைப் பெற்றுக் கொள்வதற்கு தேவனுடைய பிரமாணத்தைப் பின்பற்ற வேண்டியதாய் இருக்கிறது. ஒரே மனதுடன் இருப்பதும், ஒருவருக் கொருவர் அன்பு கூறுவதும் தேவனுடைய பிரமாணமாய் இருக்கிறது. 'அன்பில் நிலைத்திருக்கிறவன், தேவனில் நிலைத்திருக்கிறான். எல்லாவற்றையும் நம்பவும், விசுவாசிக்கவும் செய்வான். எல்லாவற்றையும் நம்புவான்'. ஓ, என்னே‚ தேவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்தருள்வார் என்று ஒவ்வொருவரும் ஒரே மனதுடன் எதிர்பார்க்குதலோடு இருப்பது, அது தான் காரியம். கவனியுங்கள். அது இங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். விஞ்ஞான ரீதியாக அது இங்கே இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். இங்கே கவனியுங்கள். புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்த திருமதி. வால்ட்ராப் (Waldorf) இங்கே இப்பொழுது எப்படி உட்கார்ந்து கொண்டு இருக்கமுடியும். அது மாதிரி உலகமெங்கிலும் ஆயிரமாயிரம் காரியங்கள் எப்படி இருக்கமுடியும்? 70ஒரு சில வாரங்களுக்கு முன் அல்லது ஒரு சில மாதங்களுக்கு முன்பாக குடிகாரனாக இருந்தவர் எப்படி இம்மதிய வேளையில் ஒரு பண்பாளராக (gentle man) இருக்கமுடியும்? ஒரு சில வாரங்களுக்கு முன் தெரு ஓரங்களில் இருக்கும் விபச்சாரியானவள் இம்மதிய வேளையில் எப்படி ஒரு சீமாட்டியாக ( lady) இருக்க முடியும்? பரிசுத்த ஆவியினால் உன்னுடைய இருதயத்திற்குள்ளாக செலுத்தப்பட்ட மறுரூபப்படுத்தும் தேவனுடைய வல்லமையானது உன்னுடைய சுபாவத்தையும், உன்னுடைய அமைப்பையும் மாற்றியிருக்கிறது. அது உன்னை வேறொரு நபராக மாற்றியிருக்கிறது. அது சரிதான். அதை நீங்கள் உணராமலிருக்கலாம். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் அதை உணருகிறீர்களோ இல்லையோ ஆனால் அது இங்கே இருக்கிறது. அது இங்கே இருக்கிறபடியால் அதற்காக தேவனுக்கு நன்றியை செலுத்துங்கள். இப்பொழுது இங்கே நம் மத்தியில் உங்கள் ஊடாக ரேடியோ அலைகள்வந்து கொண்டிருக்கிறதை என்னால் உங்களுக்கு நிரூபித்து காண்பிக்க முடியும். அதை நீங்கள் உணராமலிருக்கலாம். ஆனால் உங்களுக்கு தெரியுமா அது இங்கே இருக்கிறது, அவ்விதமே தொலைக்காட்சி படங்களும் நம் ஊடாக வந்துகொண்டிருக்கிறது. அதை நீங்கள் உணராமலிருக்கலாம், ஆனால் நிச்சயமாக அது இங்கே இருக்கிறது. ஓ, என்னே. இப்பொழுது, இந்த ஜன்னலிலிருந்து அந்த ஜன்னல் வரைக்கும் அலை பரப்பப்பட்டிருக்கும். 'ஆம்' என்று இந்த நீண்ட வார்த்தையை போல், நம்முடைய சரீரமும் அதை ஈர்த்துக் கொள்ளும்போது, அது இந்த கட்டிடம் முழுவதும் பரவிசெல்லும். “ஆம்” என்ற சத்தம் உங்கள் மத்தியில் கடந்து போகிறது. யாரோ ஒருவர் “ஆம்” என்று ரேடியோவில் கூறுகிறார்கள். சரி, அது இந்த மின்சக்தி, மின்னனு சாதனங்கள் மற்றும் அது போன்றவைகளின் வழியாக வந்து மற்றும் உங்களுடைய சரீரத்தின் ஊடாக வந்து உங்களைக் கடந்து போகிறது. எனவே, அது அந்த ரேடியோவில் இருக்கும் வால்வை (crystal) தொடும்போது அல்லது அது அதை (அந்த வார்த்தையை) பிடித்துக் கொள்ளும்போது, நீங்கள் “ஆம்” என்ற சத்தத்தை கேட்கிறீர்கள். 71இப்பொழுது, அங்கே தேவன், “அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்”, என்று கூறியிருக்கும்போது, பரிசுத்த ஆவியானவரும் அதை தேவனுடைய வல்லமையினால் கீழே கொண்டு வருகிறார்.உங்களுடைய இருதயமும் அதை ஏற்றுக் கொண்டு, “ஆம், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்” என்று கூறுகிறது. தேவனே, நீர், மாற்கு 11:24 -ல் “நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளை பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள்” என்று கூறியிருக்கிறீர். எனவே 'தேவனே, நாங்கள் ஒரு கூட்டத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோம், ஒரு கூட்டத்திற்காக உபவாசித்துக் கொண்டிருக்கிறோம், ஒரு கூட்டத்திற்காக அழுது கொண்டிருக்கிறோம்' ஆம், தேவனே அந்த கூட்டமானது வழியில் உள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே நீங்கள் தேவனுடைய வல்லமையை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் ஓ, அப்படியே அங்கேயே தரித்திருங்கள். அது உங்கள் இருதயத்தை தொடும்போது, அது “ஆம்” என்று கூறும். அடுத்த மனிதனும் “ஆம்”, என்று அறிக்கை செய்கிறான். இதை கவனியுங்கள். இப்பொழுது உங்களுடைய 'ஆம்' என்ற அறிக்கையானது இரண்டு மடங்கு பெருகுகிறது. “ஆம்”, மூன்று மடங்காகவும், நான்கு மடங்காகவும் தொடர்ந்து அது பெருகுகிறது. உங்களுக்கு தெரியுமா முதலில் நடக்கிற காரியம் என்னவென்று, அது தாமே பலஆயிரம் மடங்கு அறிக்கையிடப்பட்ட 'ஆம்' என்பதாக மாறுகிறது. அதன் பிறகு பரிசுத்த ஆவியானவரும் காட்சியில் வந்து தேவனுடைய வார்த்தையை அடையாளங்களும், அற்புதங்களும் பின் தொடரும்படி செய்து அதை உறுதிப்படுத்துகிறார். அது தான் காரியம். “ஓர் எதிர்பார்ப்பு” அதுதான் நமக்கு தேவையாயிருக்கிறது. 72இயேசு பிறந்திருந்த நேரத்தில், இந்த பகல் பொழுது போன்ற அன்றொரு நாளில் மக்கள் தேவனை விட்டுஅலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களாய் இருந்தார்கள். அந்நாட்களில் இப்பொழுது நமக்கு இருப்பது போல் ரேடியோ, தந்தி,தொலைக்காட்சி மூலமாக செய்திகளை அனுப்பக் கூடிய அநேக வழிகள் இல்லை. அப்பொழுது அவர்களுக்கு இருந்த ஒரே வழி, வாய்மொழி மூலமாக கூறப்பட்டு, காதால் கேட்கக் கூடியதாய் இருந்தது. வேகமாக; இப்பொழுது நாம் அவருக்கு செவி கொடுப்போம். இயேசு யூதேயாவிலிருக்கும் பெத்லகெமில் பிறந்தார் என்று வேதாகமத்தில் நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில் ஞானிகள் கிழக்கிலிருக்கும் போது ஒரு நட்சத்திரத்தை கண்டு அதை பாலஸ்தீனா வரைக்கும் பின்தொடர்ந்து வந்தார்கள். அது சரிதானே? ஆம், அந்நாட்களில்அவர்கள் நட்சத்திரத்தை வைத்து காலத்தை கணக்கிட்டார்கள். ஒவ்வொரு பட்டணமும் அதினுடைய உயரமான பாகத்தில் வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவியிருப்பார்கள். அவர்கள் அங்கே ஜாமக்காரரை (watchman) வைத்திருப்பார்கள், அவர்களும் அவர்களுக்கு நட்சத்திரத்தை கொண்டு நேரத்தை அறிவிப்பார்கள். பகல் நேரத்தில், சூரிய கடிகாரத்தைக் ( sundial) கொண்டு நேரத்தை அறிவிப்பார்கள். உங்களுக்குத் தெரியுமா,அவர்கள், “கோபுரத்தில் இருக்கும் ஜாமக்காரனைப் பார்த்து, இப்பொழுது நேரம் என்ன”, என்று கேட்டு, அவ்விதமாக அவர்கள் நேரத்தை அறிந்துக் கொள்வார்கள். எனவே, அவர்கள் இவ்விதமாக நேரத்தை அறிந்துகொண்டார்கள். 73நீங்கள் இதை பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த நட்சத்திரம் அங்கிருக்கும் ஒவ்வொரு பட்டணத்தையும் கடந்து வந்தது, இருப்பினும் ஒருவரும் அதைப் பார்க்கவில்லை. ஆனால் அது அவ்விதமாக கடந்து வந்ததை நம்முடைய வேதாகமம் உறுதிப்படுத்துகிறது. அது அவ்விதம் நடந்தது என்பதை நானும் விசுவாசிக்கிறேன். “நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைகிழக்கிலே கண்டு அவரைத் தொழுது கொள்ள வந்தோம்”. அது சரிதானே? அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு, இந்த நட்சத்திரத்தினால் வழிநடத்தப்பட்டார்கள். நட்சத்திரங்களிலேயே பெரிதான இந்த நட்சத்திரம், எல்லாவற்றிலும் பெரிதானது, விஞ்ஞான ரீதியாக உலகத்தில் கடந்து சென்றது. இருப்பினும் அவர்கள் அதைக் காண முடியாமலிருந்தார்கள். ஆனால் “யாக்கோபில் ஓர் நட்சத்திரம் உதிக்கும்” என்ற பிலேயாமின் தீர்க்கதரிசனத்தை கேள்விபட்ட சில ஞானமுள்ள புருஷர்கள் இருந்தார்கள். அதை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அதை அவர்கள் எதிர் நோக்கி இருந்தார்கள். எனவே அதை அவர்கள் கண்டு பிடித்தார்கள். பின்னர் அதை அவர்கள் பின்பற்றிச் சென்றார்கள். ஏனெனில் அதை அவர்கள் எதிர் நோக்கியிருந்தார்கள். நான் ஒரு காரியத்தை எதிர் நோக்கியிருக்கிறேன். நீங்களும் எதிர்பார்க்கவில்லையா? கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு சற்று முன்னதாக என் ஆத்துமா மிகவும் உன்னத நிலைக்கு ஊக்கமடைந்திருக்கிறது. ஏனெனில் தேவன் இதைவிட்டு கடந்து போவதற்கு முன்னதாக புறஜாதி உலகம் அசைக்கப்படும்படிக்கு ஏதோ காரியம் நிகழப்போவதை நான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆம். அதை நான ஃபீனிக்ஸில் எதிர் பார்க்கிறேன். அதை நான் எதிர் நோக்கியிருக்கிறேன். நீங்கள் என்னோடு கூட உடன்பட்டு, நீங்களும் அதை எதிர் பார்க்க நான் விரும்புகிறேன். 74இந்த ஞானிகள், அவர்கள், “என்றோ ஒரு நாள் என் தகப்பனார் கூறினார்... இங்கே அது வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி 'யாக்கோபில் ஓர் நட்சத்திரம் உதிக்கும்' என்று அவருடைய தகப்பனாரும், அவருக்கு தகப்பனாரும் கூறினார்கள்”, என்றார்கள். அது தோன்றினபோது அதை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் அதை எதிர்நோக்கியிருந்தபடியால், அதை அவர்கள் பார்த்தார்கள். மற்றவர்களோ அதைப் பார்க்கவில்லை. யாரோ ஒருவர் என்னிடத்தில், “அழுதுகொண்டும், கூச்சலிட்டு கொண்டும் இருக்கும் அந்த மக்களெல்லாரும் உணர்ச்சிவசப்பட்டவர்களும், தங்களை அதிகமாக கிறிஸ்தவர்களைப் போல் காண்பிக்கிறவர்கள் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” என்றார். இல்லை ஐயா. இல்லை ஐயா.அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. “சகோதரன். பிரான்ஹாம், அது மனஉளவியல் சம்பந்தப்பட்ட பேசுதல் என்று நீங்கள் நினைக்கவில்லையா?” இல்லை ஐயா. அப்படி அதை நான் நினைக்கவில்லை. அவர்கள் ஒரு காரியத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அது ஆத்துமாவை போஷிக்கும்படிக்கு பரலோகத்திலிருந்து வரும் மன்னாவை அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். எதிர்பார்ப்புடன் அங்கே அவர்கள் காத்திருக்கும்போது, பரத்திலிருந்து மன்னாவை கொடுக்கும்படிக்கு தேவன் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறார், ஏனென்றால் அவர்கள் அதை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறார்கள். நீங்களும் ஒரு கூட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறபடியால், அதை உங்களுக்குக் கொடுக்கும்படி தேவன் கடமைப்பட்டிருக்கிறார். 75இப்பொழுது, இதோ அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு மேய்ப்பர்கள் வெளியில் வந்து, யூதேயாவின் மலைகளில் பாடிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஏனெனில்அவர்கள் எப்பொழுதும் இராஜாவின் பிறப்பைக் குறித்து பாடிக்கொண்டிருந்தார்கள். எட்டு நாட்களுக்குப் பிறகு, அவருடைய தாயார் அவரை தூக்கிக் கொள்ள, அவருடைய தாயாரின் கரங்களில் இருந்தபடி, இயேசுவானவர் தேவ ஆலயத்துக்குப் போவதை நாம் பார்க்கிறோம். அங்கே ஒரு வயதான மனிதன், ஒரு வயதான சாது அல்லது நீண்ட தாடியும், தலை மயிரையும் உடைய பிரசங்கியார் என்று நாம் அவரை அழைக்கலாம். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவர் ஒரு பேர்போன மனிதனாக இருந்தார். அவருக்கு ஒரு நல்ல செல்வாக்கு இருந்தது. எனவே ஒரு நாள் அவர் வெளியில் இருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவரிடத்தில், “சிமியோனே, நீ கர்த்தருடைய கிறிஸ்துவை காணுமட்டும் மரிப்பதில்லை” என்று கூறினார். அதை அவர் விசுவாசித்தார்.அதை அவர் எதிர் பார்த்துக் கொண்டும் இருந்தார். மற்ற சபைகள் என்ன சொல்கிறது என்று அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை; அவர் தன்னுடைய செல்வாக்கு பாதிக்கப்படுமோ என்றும் கவலைப்படவில்லை. அவர், “நான் கர்த்தருடைய கிறிஸ்துவை காணுமட்டும் மரிப்பதில்லை”, என்று கூறினார். சிலர் இப்படியாக கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது, “உனக்குத் தெரியுமா? அந்த வயதான மனிதன் கொஞ்சம் மூப்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறான். தெரியுமா உனக்கு? அவனுக்கு ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது” என்றார்கள். அவர்கள் வழக்கமாக அப்படி கூறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியும். “ஆனால் அந்த மக்களுக்குத்தான் இங்கே ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது”. பாருங்கள். 76நல்லது, அங்கே என்ன நடந்தது? தேவன் தன்னுடைய வார்த்தையை காத்துக் கொள்ளுவார் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். அவன் சரியான காரணத்தைக் கொண்டிருந்தான். இல்லையா? அவர்கள் “சரி, நீ அதை பார்க்கப்போகிறாய் என்று உனக்கு எப்படித் தெரியும். தாவீதும் அதை எதிர்பார்த்தான், ஆதாமும் கூட அதை எதிர்பார்த்தான், அவர்களெல்லாரும் அதை அப்பொழுதிலிருந்து எதிர்பார்த்தார்கள். மேலும் நான்காயிரம் வருடங்கள் வேறு கழிந்துவிட்டன, அதைப் பற்றியதான ஒரு அடையாளம் கூட இல்லையே” என்றார்கள். “எவ்வளவு வருடங்கள் கடந்து போனது என்பது பற்றி நான் கவலைப்படவில்லை; பரிசுத்த ஆவியானவர், நான் பார்ப்பேன் என்று என்னிடத்தில் கூறியிருக்கிறார், எனவே நான் அதை விசுவாசிப்பேன்”. அது போதுமானது. அது ஒரு நல்ல காரணம், இல்லையா? “நீ ஏற்கனவே, ஒரு காலை கல்லறையில் வைத்துள்ளாய், எண்பது வயதாகிவிட்டது மற்றும் நீ மரிக்கப் போகிற நிலையில் இருக்கிறாய்” என்றார்கள். “எனக்கு எவ்வளவு வயதாகிவிட்டது என்பது பற்றி நான் கவலைப்படவில்லை, ஆனால் நான் மரிப்பதற்கு முன்னதாக கிறிஸ்துவைப் பார்ப்பேன், ஏனெனில் அவ்விதமாக பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில் கூறியிருக்கிறார். எனவே நான் அதை நிச்சயத்தோடு எதிர்பார்த்துக் கொண்டும் தேவனுக்கு அவருடைய வாக்குத்தத்துக்காக நன்றியை செலுத்திக் கொண்டும் இருக்கிறேன். காரணம் நான் அவரை பார்க்கப்போகிறேன்” என்றார். ஓ, என்னே. அது தான் காரணம். கிறிஸ்துவைப் பார்க்கும்படி அவர் எதிர்பார்த்திருந்தார். 77சரி, இப்பொழுது நாம் சிறிய நாடக வடிவில் பார்க்கக் கூடிய நேரம் வந்திருக்கிறது. அங்கே தேவாலயத்தில் ஒரு ஜெப அறை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அது ஒரு திங்கட்கிழமை காலை என்று கூறலாம். ஓ, அந்த சமயத்தில் கிட்டத்தட்ட இருபது லட்சம் யூதர்கள் பாலஸ்தீனாவில் இருந்தார்கள். ஒரு வேளை அங்கே ஒவ்வொரு இராமுழுவதும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறந்திருக்கக்கூடும். அங்கே ஒவ்வொரு நாளும் பெண்கள் வரிசையில் நின்று கொண்டு, ஆண் பிள்ளையை விருத்தசேதனம் செய்யும்படி, காட்டுப் புறாக்களையும், ஆட்டுக் குட்டிகளையும் காணிக்கையாக செலுத்திக் கொண்டிருந்தார்கள். உங்களுக்குத் தெரியும், யூதர்களின் நியாயப்பிரமாண புத்தகத்தில், அது சிறிய விவசாயி என்று இருக்கும் பட்சத்தில், அவர்கள் காட்டுப் புறாக்களையும், அதுவே ஐசுவரியவனாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஆட்டு குட்டியையும் தாயின் சுத்திகரிப்புக்கும், குழந்தையின் விருத்தசேதனத்துக்கும் இன்னும் மற்றவைகளுக்காகவும் காணிக்கையாக செலுத்த வேண்டும். அது ஒரு திங்கள் காலை என்று கூறலாம். சரி, தேவாலயத்தில் மக்கள் மிகவும் அலுவலாயும், எப்பொழுதும் மக்கள் வருவதும், போவதுமாக இருப்பதை நான் காண்கிறேன். அது தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. அதற்கு சிறிது நேரம் கழித்து, மக்கள் நீண்ட வரிசையில், அதாவது பெண்கள் மேலும் கீழுமாக அந்த வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். 78அங்கே சில பெண்கள் தங்கள் சிறு பிள்ளைகளோடு, பின்னல் வேலை கொண்டு பின்னப்பட்ட இளஞ்சிவப்பு மேலங்கிகளையும், சால்வைகளையும், சிறிய நீல சால்வைகளையும் அணிந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை அழைத்துக் கொண்டு செல்வதை நான் காண்கிறேன். அவர்கள் பணக்கார ஸ்திரீகள், ஓ, எவ்வளவு நேர்த்தியாக இருந்தார்கள். நாம் அந்த நீண்ட வரிசையைப் பார்க்கலாம். அங்கே ஒரு சிறிய சீமாட்டி தன் தலையை தாழ்த்தினபடி, சிறிய வயதுடைய ஒரு பெண் தன் கரங்களில் ஒரு குழந்தையை ஏந்தியபடி நின்று கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். ஓ, என்னே, ஏழையான ஸ்திரீ. இரண்டு காட்டுப்புறாக்கள் வைத்திருந்தாள். ஆடைகள்? அந்த குழந்தை மாட்டு தோள்பட்டையில் சுற்றப்பட்டிருக்கும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. அது ஒரு எருதின் நுகத்தை இலகுவாக்கி கொடுக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். அது (எருது) ஏர் உழும்போது, தன்னுடைய தோள்பட்டையில் பாரத்தினால் உண்டாகும் உராய்வுநிமித்தம் புண் ஏற்படாதபடிக்கு அது பாதுகாக்கிறது. அங்கே தொட்டிலில் ஒன்றும் இல்லாதிருந்தது. எனவே அவர் அணிந்து கொள்வதற்கு எந்த ஆடையும் அங்கே இல்லை. நீங்கள் ஏழ்மையைக் குறித்து பேசுகிறீர்கள். அந்த அளவுக்கு ஏழ்மையான ஒரு குடும்பம் கூட ஃபீனிக்ஸில் இல்லை. ஏனெனில் தொண்டு நிறுவனங்கள் அதைக் காட்டிலும் அதிகமாக உங்களுக்குச் செய்கிறது. ஆனால் சிருஷ்டிப்பின் தேவனாகிய அவர், தொழுவத்தில் பிறந்து, இதோ இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவர் தொழுவத்தில் பிறந்து உலகத்திற்கு வந்து, மரண தண்டனை பெற்று, உலகை விட்டுக் கடந்து சென்றார். அவர் தமக்கு சொந்தமானவரிடத்தில் வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ... அவரால் உருவாக்கப்பட்ட இந்த உலகிற்கு அவர் வந்தார். ஆனால் உலகமோ அவரை அறியாமலிருந்தது. அவரோ இங்கே, மாட்டுத் தோள்பட்டையில் சுற்றப்பட்டிருக்கும் துணியால் சுற்றப்பட்டு, தன்னுடைய தாயாரின் கரங்களில் கிடத்தப்பட்டிருந்தார். 79அவள் அவ்விதமாக தொடர்ந்து வரிசையில் வந்து கொண்டிருந்தாள். சிலர் இப்படியாக கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. “ஏய், அதோ அங்கே இருக்கிறாளே அவள் தான் அது. உனக்கு தெரியுமா? அந்த பெண்தான் திருமணம் செய்து கொள்ளமலே குழந்தையைப் பெற்றுக் கொண்டாள். அவள் அருகில் நிற்காதே”. அவர்கள் அவளிடத்திலிருந்து தூர விலகியிருந்தார்கள். இன்றைக்கு மக்களும் தங்களின் எண்ணங்களில் இந்த சகோதரிகளை அவ்விதமாக நினைக்கிறார்கள், 'அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளையர்கள், அவர்களிடத்தில் ஐக்கியம் கொள்வதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை“. அவள் எங்கே நிற்கிறாள் என்று அந்த சிறிய மரியாள் அறிந்திருந்தாள். அவ்விதமே தேவனுடைய வல்லமையினால் மறுபடியும் பிறந்த சபையும் தான் எங்கே நிற்கிறோம் என்பதை அறிவாள். அவர்கள் கூறுவது அவளுக்கு எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள், அவர்களை பைத்தியம் பிடித்தவர்கள் என்றும் அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் கூறலாம், ஆனால் அவர்கள் தாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை அறிந்திருக்கிறார்கள். எனவே நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் சொல்வதை சொல்லட்டும், நீங்களோ தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள். 80அவளோ தன் வாயை திறவாதிருந்தாள். அவள் அந்த சிறு குழந்தையை தாலாட்டிக் கொண்டு, அவருடைய கன்னத்தை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். விண்மீன்கள் போன்று ஒளிருகிற, சிறிய நட்சத்திரங்கள் போல் இருக்கிற அவருடைய கண்கள் மேலே நோக்கிப் பார்த்து, அவருடைய தாயை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அவருடைய தாயும் அவரை தட்டிக் கொடுத்து கொண்டிருந்தாள். சிலர், “அதை கவனியுங்கள், அது அதிகமாக தெரியவில்லையா?” என்றார்கள். அவர்களோ, அங்கு நடப்பது என்னவென்று அறியாமலிருந்தார்கள், அவர்களுடைய சிருஷ்டிகரோ அங்கே அந்த கரங்களில் கிடத்தப்பட்டிருந்தார். எனவே அது (அந்த வரிசை) அவ்விதமாக நெருங்கி நகர்ந்து கொண்டிருந்தது. அங்கே அவர் அவளுடைய கரத்தை அப்படியாக பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார். அவள் அந்த சிறு குழந்தையை அப்படியாக தட்டிக் கொடுத்துக் கொண்டு, அவருடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கே தாய்மார்கள் அவளுக்கும் அவர்களுக்கும் இடைவெளிவிட்டு நிற்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஓ, அந்த ஆலயத்தின் கிறிஸ்துவோ, அங்கே ஆலயத்தில் எளிமையாகவும், தாழ்மையாகவும் நகர்ந்து கொண்டிருந்தார். அங்கே சிமியோன் உட்கார்ந்தபடி ஏசாயா புத்தகத்திலிருந்து, “நாமெல்லாம் ஆடுகளைப் போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்”. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்“, என்று வாசித்துக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. சிமியோன் இவ்விதமாக, “இது யார்? யாரைக் குறித்து எழுதப்பட்டுள்ளது என்று ஆச்சரியப்படுகிறீர்களா”? என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுவதை நீங்கள் யாவரும் விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய குமாரர்கள் தேவ ஆவியினால் வழி நடத்தப்படுகிறார்கள், அது சரி தானே? 81எனவே, பரிசுத்த ஆவியானவரும் அவனிடத்தில், “அவன் மரிப்பதற்கு முன்னதாக கிறிஸ்துவை காண்பான்” என்று அவனிடத்தில் கூறியிருந்தார். இப்பொழுது, இங்கே அவன் தேவனுடைய வார்த்தையை வாசித்துக் கொண்டும் இன்னும் அவ்விதமாக ஏதோ காரியத்தை செய்து கொண்டுமிருந்தான். அப்பொழுது “சிமியோனே, எழுந்து நில்”, என்று பரிசுத்த ஆவியானவர் அவனிடத்தில் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. சிமியோன், “சரி ஆண்டவரே. சரி ஆண்டவரே”, என்றான். “சிமியோனே, நடக்கத் துவங்கு”. “எங்கே ஆண்டவரே?” “தொடர்ந்து நட. அவ்வளவுதான். தொடர்ந்து நடந்துகொண்டே இரு”. ஓ, என்னே. அல்லேலூயா. அதை நான் நேசிக்கிறேன். தொடர்ந்து நடந்துகொண்டேயிரு. சிமியோனே, நான் உனக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது அதைக் குறித்து நீ அறியமாட்டாய், ஆனால் உண்மையிலேயே இப்பொழுது நீ அதை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாய். 82உங்களுக்குத் தெரியும், அவ்விதமாக சிமியோன் வெளியே நடக்கத் துவங்கினான். அவன் “நல்லது, இதற்கு முன்னர் இது மாதிரி நான் உணர்ந்ததில்லை” என்றான். அவன், “ஏதோ காரியம் இருக்கிறது, நானும் ஏதோ ஒரு விதத்தில் சமாதானமாய் உணர்கிறேன். இம்மட்டுமா, ஆண்டவரே?” என்றான். அவர், “தொடர்ந்து நடந்து கொண்டேயிரு”, என்றார். அவன் தொடர்ந்து நடந்து சென்று, பெண்களின் வரிசை இருக்கும் இடத்தைப் பார்த்தான். “நல்லது, இன்னும் சற்று தொடர்ந்து செல்லலாம் என்று நான் நினைக்கிறேன்”. அவன் அவ்விதமாக நெருங்கி சென்றவுடன், ஏதோ காரியம் அவன் மீது அசைவாடத் துவங்கினது. “அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா?” ஏனெனில் தேவனுடைய குமாரர்கள், தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுகிறார்கள். அவனுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட காரியம் அங்கே இருந்தது. பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு வாக்குத்தத்தம் செய்த அந்த ஒருவர், மேசியா அங்கே தேவாலயத்தில் வந்திருந்தார். அவன் தொடர்ந்து நடந்து சென்று, அந்த இளம்பெண்னை கவனித்தான்; அவன் தன் கரத்தை நீட்டி, தன்னுடைய கரங்களில் அந்த குழந்தையை ஏந்திக் கொள்ள, கண்ணீர் அவனுடைய வெள்ளைத் தாடியின் மேலாக வழிந்தோடியது. “இப்பொழுது, கர்த்தாவே, உம்முடைய அடியான், உம்முடைய வார்த்தையின்படி சமாதானத்தோடே கடந்து செல்லட்டும். ஏனெனில் உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது”. ஓ, என்னே, பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டான். ஆம், அவரை பார்க்கும்படிக்கு அவன் எதிர்பார்த்திருந்தான். எனவே அவன் அவரை பார்க்கும்படிக்கு எதிர்பார்த்திருக்கும் போது, அவரை காண்பிக்க தேவன் அவனுக்கு கடமைப்பட்டவராயிருக்கிறார். 83அங்கே தூரத்தில் ஒரு மூலையில் ஒரு வயதான தீர்க்கதரிசினி உட்கார்ந்து கெண்டிருந்தாள். அவளும் தேவனுடைய இராஜ்ஜியம் வரும்படிக்கு, இஸ்ரவேலின் ஆறுதலுக்காகவும் தேவனுடைய வருகைக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே அவள் உட்கார்ந்து கொண்டிருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. வேதாகம வல்லுனர்கள் அவளுடைய வரலாற்றைப் பற்றி கூறும்போது, அவள் கண் பார்வை இல்லாதவள் என்று தெரிவிக்கின்றனர். அங்கே ஒரு மூலையில் அவள் உட்கார்ந்துகொண்டிருந்தாள். பரிசுத்த ஆவியானவர் அவளிடத்தில், “அன்னாளே எழுந்திரு”, என்றார். இதோ, குருடான அவள், சுற்றி வளைந்து ஆலயத்தினூடாக கடந்து வந்தாள், இஸ்ரவேலின் ஆறுதலுக்காக காத்துக் கொண்டிருந்த அவள், பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டாள். அவரிடத்தில் அவள் வந்து சேருமட்டும், ஜோன்ஸ் இன்னும் மற்றெல்லாரையும் தாண்டி, தன் வழியில் கடந்து, அவருக்கு முன்பாக வந்து நின்று, தன் கரங்களை உயர்த்தி, தேவனை துதிக்கவும், தீர்க்கதரிசனம் உரைக்கவும் செய்தாள். அல்லேலூயா. மற்றவர்களோ தங்கள் வழியாகச் சென்று, அந்த வான ஆராய்ச்சி கூடத்திலிருக்கும் மனிதனைப் போன்று, அதைப்பற்றி ஒன்றும் அறியாதிருந்தார்கள். ஆனால் இந்த மக்களோ அதை எதிர் பார்த்திருந்தார்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். 84இரண்டு பரிசுத்த ஆவியானவர் என்பது கிடையாது. ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவர் மட்டுமே உண்டு. இன்றைக்கு நீங்கள் இங்கே இருப்பதற்கான காரணம் தெய்வீக சுகமளித்தலை நீங்கள் விசுவாசிப்பதினால் தான். எனவே நீங்கள் இங்கே இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக சிமியோனை வழிநடத்தின அதே பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றைக்கு இங்கே உங்களையும் வழிநடத்தி வந்திருக்கிறார். மற்றவர்கள் உங்களை பார்க்கும்படிக்கு நீங்கள் வரவில்லை. இங்கே உங்களை வழிநடத்தி வந்தது அதே பரிசுத்த ஆவியாய் இருக்கிறது. எனவே தேவன் தாமே தன்னுடைய தெய்வீக வல்லமையை பொழிந்தருளும் படிக்கு நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அல்லேலூயா. “ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது”, என்று தாவீது கூறியிருக்கிறார். நானும் அதை அநேக முறை கூறியிருக்கிறேன், “ஓ, தேவனே, உம்முடைய ஆழத்தின் மதகுகளின் இரைச்சல்”. ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. எனவே இங்கே ஒரு ஆழம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாக, இதற்கு பிரதியுத்தரம் கொடுக்கத்தக்கதாக இன்னொரு ஆழம் இருக்கவேண்டும். அது சரிதானே? ஆகவே மீனின் முதுகில் ஒரு துடுப்பு (fin) என்ற ஒன்று இருப்பதற்கு முன்னர், அது நீந்தும்படிக்கு தண்ணீர் என்ற ஒன்று இருக்க வேண்டும். இல்லையென்றால் அதின் முதுகில் மீன் நீந்தும்படிக்கான துடுப்பு என்ற ஒன்று இருக்கவேண்டிய அவசியமில்லை. அது சரிதானே? எனவே துடுப்பு என்ற ஒன்று இருப்பதற்கு முன், தண்ணீர் என்ற ஒரு காரியம் முதலில் இருக்கவேண்டும். ஓ, என்னே. நீங்கள் இதை பிடித்துக் கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அது தாமே காற்றினூடாக வருகிறதை நான் உணர்கிறேன். 85கவனியுங்கள், பூமியில் (நிலம்) ஒரு பனைமரம் வளருவதற்கு முன், ஒரு பூமி (நிலம்) இருந்தாக வேண்டும் இல்லையென்றால் அது வளரக்கூடிய பனைமரம் என்ற ஒன்று இருக்காது. அது சரிதானே? நீங்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிப்பீர்களானால், அதை கொடுக்கக்கூடிய தேவனுடைய வல்லமை ஒன்று முன்னதாக இருந்தாக வேண்டும். ஏதோ ஒன்று அந்த வாஞ்சையை உன் இருதயத்தில் சிருஷ்டித்திருக்க வேண்டும். அது சரிதானே? அவ்விதமே சிருஷ்டிப்பு என்ற ஒன்று இருப்பதற்கு முன்னர், அந்த சிருஷ்டிப்பை சிருஷ்டிக்கக் கூடிய சிருஷ்டிகர் என்ற ஒருவர் இருந்தாக வேண்டும். அது சரிதானே? அது தான் காரியம். இங்கே இந்த பட்டணத்தில் தேவனுடைய வல்லமையை பார்க்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் ஒரு வாஞ்சையை உங்களுடைய இருதயத்தில் சிருஷ்டித்திருப்பாரானால்; தடைகளை தகர்த்து போட்டு, தேவனுடைய வல்லமையை கொண்டு வந்து, நாம் எதிர்பார்த்தபடியே சுகமளித்தலையும், இரட்சிப்பையும் மற்றும் நம் ஒவ்வொருவர் மேலும் பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலையும் கொண்டு வரக்கூடிய தேவனுடைய வல்லமை என்ற ஒன்று எங்கோ இருந்தாக வேண்டும். இவ்விதமான காரியங்களை நாம் பார்க்கும்போது, பரிசுத்த ஆவியைக் கொண்டு செய்யப்படும் தேவனுடைய ஆச்சரியங்களை, பார்க்கக்கூடிய நாளில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதை நாம் பார்ப்போம் என்று எதிர்பார்த்திருக்கிறோம்; ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. 86சில நாட்களுக்கு முன், ஒரு சிறு பையன் பென்சிலில் இருக்கும் அழிப்பானை (eraser) சாப்பிட்டு விட்டான் என்று நான் படித்தேன். அவன் சைக்கிளில் இருக்கும் ரப்பரால் (rubber) ஆன மிதிக் கட்டையையும் கூட சாப்பிட்டுவிட்டான். எனவே அந்த சிறு பையனை கிளினிக்கிற்கு கொண்டு சென்று உடல் பரிசோதனை செய்தார்கள். மருத்துவரும், “ஆம், இந்த சிறு பையனுக்கு கந்தகம் ( sulfur) தேவைப்படுகிறது”, என்றார். சரி, என்ன அந்த சிறுபையன் கந்தகம் கிடைக்கக்கூடிய பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவனாயிருக்கிறான். எனவே இங்கே கந்தகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சை அவனுக்கு இருக்குமானால், அந்த கந்தகத்தின் மேலான வாஞ்சையை உருவாக்கும்படிக்கு முதலாவது எங்கோ கந்தகம் என்ற ஒன்று இங்கே இருந்தாக வேண்டும். வல்லமையை கொடுக்க கூடிய தேவன் ஒருவர் இருக்கும்போது, அந்த வல்லமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பு நமக்குள் இருக்கும். மற்றும் நாம் சுகத்திற்காகவும், இரட்சிப்புக்காவும், தேவனுடைய மகிமைகளுக்காகவும் இன்னும் பரிசுத்த ஆவியின் நிரப்பப்படுதலுக்காகவும் தவிக்கும்போது, அவ்விதமான காரியங்கள் நிச்சயம் ஓரிடத்தில் இருந்தாக வேண்டும் அப்படி இல்லாதபட்சத்தில் அதை பெற்றுக் கொள்ளத்தக்கதான வாஞ்சை நமக்கு இருக்காது. பாருங்கள். அதுதான் காரியம்; ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. இங்கே கொஞ்ச நாட்களுக்கு முன்னர், நான் ஒரு மலைமீது நின்று கொண்டிருந்தேன். ஒரு சிறிய விடுமுறையில், அங்கே நான் குதிரைமேல் சவாரி செய்து சில கால்நடைகளை கீழே துரத்திக் கொண்டிருந்தேன்.நான் ஒரு காட்சியை கண்டபோது, என்னுடைய தொலைநோக்கியை எடுத்து, என்னுடைய குதிரையை கட்டிப்போட்டு, அந்த பள்ளத்தாக்கிற்கு அப்பால் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் கவனித்தபோது அங்கே மலை மேலாக ஒரு கூட்ட கழுகுகள் கிறீச்சொலியை எழுப்பிக் கொண்டிருந்தன. அங்கே ஒரு அனுபவமிக்க தாய் கழுகு தன்னுடைய குஞ்சுகளை கூட்டைவிட்டு முதல் தடவையாக வெளியே கொண்டு செல்லும்படிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. 87அவைகள் அப்படியாக பறக்க ஆயத்தமாவதை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். அதை பார்த்த நான் “ஓ, ஆண்டவரே, அல்லேலூயா”, என்றேன். வருகின்ற நாட்கள் ஒன்றில் இன்னொரு கூட்ட கழுகுகள் பறக்க ஆயத்தமாவதையும் நான் அறிவேன். அந்த அனுபவமிக்க தாய்கழுகு தன்னுடைய சிறகுகளை நீளமாக விரித்தது. அவள் தாமே அந்த குஞ்சுகளிடத்தில் கூவிக் கொண்டிருந்தாள். உங்களுக்குத் தெரியும், அப்படியாக அவள் கூ,கூ,கூ... என்று கூவிக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய சிறகுகளை அவைகளிடத்தில் காண்பித்து, “கூ, கூ, கூ, கூ, கூ, கூ என்று கூவியபடி, அவைகள் தன்னுடைய சிறகுகளில் ஏறிக் கொள்ளும்படி முயற்சித்துக் கொண்டிருந்தாள். பின்னர் அவள் அவைகளை தன்னுடைய சிறகுகளின் மேலாக ஏற்றிக்கொண்டாள். இந்த தாய், குஞ்சுகளில் ஒன்றினிடத்தில் சென்று அதை அங்கே உயர வைத்து, அது கூ,கூ,கூ... என்று கூவுவதை கவனித்து, அவைகளை அப்படியாக நேசிப்பாள். “அதைத்தான் பரிசுத்த ஆவியானவரும் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கிறார், எப்படியெனில் ஒருவனை தேடிச் சென்று, அவனை ஏற்றுக் கொண்டு, அவனை உன்னதத்தில் வைக்கிறார். மற்றும் இவைகள் கூ,கூ,கூ என்று கூவுவதை இவர் கேட்கும்போது; ஆயத்தமாகுங்கள், ஆயத்தமாகுங்கள், காலம் சமீபமாயிருக்கிறது என்று சத்தமிடுகிறார்”. அந்த துர்நாற்றம் வீசும் கூட்டிலிருந்து வெளி வருவது... வியூ, என்னே ஆம், ஐயா. 88அவைகள் கூட்டைவிட்டு ஒருவிசை வெளியேறினால், அவைகள் மறுபடியும் திரும்பி அந்த கூட்டிற்கு திரும்பிப் போகாது. அல்லேலூயா. அவள், அவை யாவையும் கீழே விழாதபடிக்கு இருகப்பிடிக்கும்படி செய்வாள். அவைகள் தங்களுடைய சிறிய வளைந்த நகங்களைக் கொண்டு அவளுடைய இறக்கைகளை கொக்கிப்பிடியாக பிடித்துக் கொண்டு, தங்களுடைய சிறிய அலகினால் அவளுடைய சிறகுகளை இவ்விதமாக பிடித்துக் கொள்ளும்படி செய்வாள். அவள் தன்னுடைய இவ்வளவு பெரிய இறக்கைகளை விரித்து அந்த கூட்டைவிட்டு வெளியேறி, சரியாக கீழ்நோக்கி... அப்பொழுது கழுகுகள், குஞ்சுகளில் ஒன்றை கீழே தவற விடுவாளானால், அவைகள் உடனடியாக அதனிடத்தில் சென்று, அதனை மறுபடியும் பிடித்து தன் மேல் தூக்கிக் கொள்ளும் என்று சொல்லுகிறார்கள். ஆமென். அது சரிதான். அவள் அங்கே கீழேயிருக்கும் பச்சைப்பசேலான புல்வெளிக்கு தன் குஞ்சுகளை கொண்டு வருவாள். அந்த சிறிய கழுகுகள்,இப்பொழுதிருக்கும் இந்த உலகத்துக்கு ஒப்பான அந்த அசிங்கமான கூட்டைவிட்டு, இதற்கு முன்பாக இங்கே வந்திராத இவ்விடத்திற்கு வரும். எனவே அவள் அவைகளையெல்லாம் கீழே இறக்கி, இந்த பச்சைப்பசேலான புல்வெளியில் வைத்துவிட்டு, அவள் திரும்பவும் தன்னால் போகக்கூடிய மேலிருக்கும் மிக உயரமான பாறைகளின் சிகரத்திற்கு செல்வாள். அப்படியாக அங்கே அவள் உட்கார்ந்தபடி தன்னுடைய பெரிய இறக்கைகளை மேலும் கீழுமாக அடித்துக் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருப்பாள். 89அங்கே அந்த சிறிய கழுகுகளுக்கு ஒரு பரிசுத்த ஆவியின் கூட்டம் உண்டாயிருந்தது. என்னே அப்படிப்பட்ட ஒன்றை என் வாழ் நாளில் நான் பார்த்ததேயில்லை. அவைகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு, வாய் நிறைய தேவையான புல்லை எடுத்துக் கொண்டு... அதைக் கண்டநான், “அதுதாமே பழமையான பாணியிலான வீடு திரும்புதலும், தேவனுடைய வல்லமைகள் கூட்டிச் சேர்க்கப்படும் காரியமுமாக இல்லையா”? என்றேன். அந்த பழைய அசிங்கமான பிசுபிசுப்பான கூட்டைத் தவிர வேறெதையும் அறிந்திராத அவைகளின் சிறிய கால்கள், இப்பொழுது இந்த மென்மையான புல்தரை மேலாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த உலக கூடாகிய பழைய எகிப்தின் கூட்டிலிருந்து, வெளிவந்து, உங்கள் ஆத்துமா இலகுவாகி, தேவனுடைய மகிமை உங்களை முழுவதும் சூழ்ந்திருக்கும் அந்த நல்ல அருமையான தேவனுடைய வல்லமைகளுக்குள் செல்வது என்பது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அவைகள் அப்படியாக இங்கும் அங்கும் நடந்து கொண்டும், இதை எடுத்துக் கொண்டும் அவ்விதமாக அவைகளுக்கு ஒரு நல்ல அருமையான நேரம் உண்டாயிருந்தது. 90இந்த அனுபவமிக்க தாய் மறுபடியும் மேலே பறந்து சென்று, அவளால் எவ்வளவு உயரம் போக முடியுமோ அவ்வளவு உயரம் சென்று அங்கே உட்கார்ந்து கொள்வாள், ஏனெனில் அங்கிருந்து அவளால் எவ்விடத்திலும் பார்க்கமுடியும். “ஓ, என்னே. இப்பொழுது ஒரு ஓநாய் (coyote) வரட்டும், அவனை அது துண்டு துண்டாக கிழித்து போட்டுவிடும்”, என்று எண்ணினேன். எனவே, நான் இவ்விதமாக நினைத்தேன், அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஏனெனில் இயேசு என்னை இவ்வுலகத்திலிருந்து வெளியே கொண்டு வந்த பிறகு, அவர் மகிமையின் அலங்கத்திற்கு ஏறிச் சென்று, அங்கே உன்னதத்திலிருக்கும் அவருடைய மாட்சிமையில் அமர்ந்திருக்கிறார் என்றும், அங்கிருந்தபடி தகைவிலான் குருவி (sparrow) மேல் தன் பார்வையை வைத்திருக்கும் அவர், என்னையும் கவனிக்கிறார் என்பதை நான் அறிவேன். தொல்லைகள் ஆரம்பிக்குமானால், அவரே என் கேடகமாயிருக்கிறார். அவர் நம்மை கவனிக்கிறார் என்று நான் நினைக்கும்போது... உங்களுக்கு தெரியும், முதலாவது என்ன நடக்கும் என்று, அவள் தன் பெரிய தலையை தூக்கி, சுற்றும் முற்றும் பார்க்க துவங்குவதை நான் கவனித்தேன். அங்கே தூரத்தில் ஒரு புயல் வந்துக் கொண்டிருக்கிறது, அது அநேக மைல்களுக்கு அப்பால் வரும்போதே அதை அவளால் முகர முடியும். கொலோராடாவில் அவ்விதமான புயல்கள் அவ்வளவு துரிதமாக வந்துவிடும். 91எனவே முதலாவது காரியம் என்னவெனில், அவள் புயல் வருவதை பார்க்க ஆரம்பித்தவுடன், அவள் ஒரு பெரிய சத்தத்தை எழுப்புவாள். அந்த சமயத்தில் அந்த சிறிய கழுகுகள் அங்கேயிருக்கும் அந்த புல்வெளியில் எங்கும் சுற்றிக் கொண்டிருக்கும். அவள் ஒரு பெரிய சத்தத்தை எழுப்பியவாறு, சரியாக அங்கிருக்கும் அந்த புல்வெளியின் நடுவே பறந்து, ஒரு பெரிய விமானம் இறங்குவதை போல் இறங்கி நிற்பாள். அங்கிருக்கும் அந்த ஒவ்வொரு சிறிய கழுகுகளும் அவளுடைய சத்தத்தை நன்கு அறியும். இதோ அவைகள் உடனடியாக அவளிடத்தில் வந்து, அவை ஒவ்வொன்றும் திரும்பவும் அவளை பற்றிப்பிடித்து, அவளுடைய இறகுகளை அப்படியாக பிடித்துக் கொள்ளும். அதன் பிறகு அவள் பூமியிலிருந்து பறக்கத் துவங்குவாள். அந்த சமயத்தில் காற்று அந்த பள்ளத்தாக்கின் ஊடாக வரும், அப்பொழுது அவள் ஒரு மணி நேரத்திற்கு கிட்டதட்ட அறுபது மைல் வேகத்தில் காற்றை கிழித்துக் கொண்டு பறந்து, அங்கே பாறையில் இருக்கும் ஒரு துவாரத்திற்குள் பறந்து அடைக்கலம் புகுந்துவிடுவாள். 92நான், “என்றென்றைக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” என்று சொன்னேன். அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டு, உயிர்த்தெழுந்த அவர் தாமே, இன்றிரவு நம்மை கண்காணிக்கும்படிக்கு, நம்முடைய மகிமையின் இரட்சகர் அங்கே உயர இருக்கும் கல்வாரியின் அலங்கத்திற்கு ஏறியிருக்கிறார். மேலும் நம்மை வியாதிபடுக்கைகளிலிருந்தும், முடமான இருக்கைகளிலிருந்தும் விடுவித்து (அல்லேலூயா), அங்கே தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருக்கும் பாதுகாப்பு என்னும் கன்மலைக்கு நம்மை கொண்டு செல்லும்படிக்கு அவர் பரிசுத்த ஆவி என்னும் இறக்கையை விரித்து, நமக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார்“. நாம் விசுவாசிப்போம். ஒரே இடத்திலும், ஒரே ஒருமைப்பாட்டிலும் வந்து, சூழ்நிலையை ஏற்றதாக ஆக்குவோம். நாம்எதிர்பார்த்திருக்கும் போது, தேவன் நம்மை பரிசுத்த ஆவியினால் நிரப்பி அவருடைய வல்லமைகளை கீழே அனுப்புவார். இதை விசுவாசிக்கிறீர்களா? நாம் தலைகளை தாழ்த்துவோமாக. இரக்கமுள்ள பரலோகப் பிதாவே, இன்று அவருடைய பிரசன்னத்தினிமித்தம் எங்கள் இருதயங்கள் சந்தோஷமடைந்து, பாரமற்றதாய் மாறி இருக்கிறது, ஏனெனில் அவர் இங்கே இருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பெரிதான, இன்னும் பெரிதான கூட்டங்களையும், தேவனுடைய வல்லமைகள் பிரதியட்சமாவதையும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். நித்தியமான ஒன்றை நாங்கள் பெற்றுக் கொள்ளும்படிக்கு, உம்முடைய ஆவியானவர் தாமே இந்த கட்டிடத்தின் மேல் சுற்றிவருவாராக. உம்முடைய பெரிதான இறக்கைகளை நீர் விரிவடையச் செய்து, சுத்திகரிக்கப்பட்ட பனித்துளி போன்ற உம்முடைய இரக்கத்தை ஒவ்வொரு ஆத்துமாவின் மீதும் பொழியச் செய்து, ஒவ்வொரு வேறுபாட்டையும் புறம்பே அகற்றிப் போடட்டும். 93இவ்விடத்தில் எவராவது ஒருவருக்கு விரோதமாக மனக்குறை கொண்டிருக்கும் புருஷர்களோ, ஸ்திரீகளோ அல்லது வாலிபர்களோ, வயதானவர்களோ இங்கே இருப்பார்களானால், அதை அவர்கள் இப்பொழுதே தங்கள் இருதயத்தில் சரி செய்யட்டும். நீங்கள், “கர்த்தாவே, நான் இங்கே கீழிருக்கும் இந்த வறண்ட பள்ளத்தாக்கில் நீண்ட காலமாக ஜீவித்து வருகிறேன். நான் அதை கேட்டிருக்கிறேன். நான் அதற்காக ஜெபித்திருக்கிறேன். நான் அதைக் குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். நான் ஜெபித்திருக்கிறேன். நான் அதற்காக உபவாசித்திருக்கிறேன். இந்த பள்ளத்தாக்கில் இருக்கும் மக்கள் மேலாக மகத்தான பரிசுத்த ஆவி பொழிதலின் ஆசீர்வாதத்தை பார்க்கும் படிக்கு நான் வாஞ்சிக்கிறேன்”, என்று கூறுங்கள். எனவே, இப்பொழுது, கர்த்தாவே, நீர் அதை செய்யப் போகிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இதை அளியும், பிதாவே பரிசுத்த ஆவியானவர் தாமே ஒவ்வொரு பாவியின் இருதயத்தோடு இடைபட்டு, அவர்களும் “அதற்கான நேரம், இப்பொழுதே”, என்று கூறுவார்களாக. இயேசு தன்னுடைய ஊழியத்தின் ஆரம்ப கால கட்டத்தில் சீமோன் மற்றும் செபுதேயுவின் குமாரர்களிடத்தில், “என்னை பின்பற்றுங்கள், நான் உங்களை மனுஷர்களை பிடிக்கிறவர்களாக மாற்றுவேன்”, என்று கூறினார். அவ்விதமே எங்களை ஆக்கும், கர்த்தாவே. இப்பொழுதே அவர்கள் எங்களோடு கூட இணைந்து இரட்சிக்கப்பட்டிருப்பார்களாக. 94சகோதரன் பிரான்ஹாம், 'பாவியாகிய என்னை நினைவுகூரும்' என்று தன்னுடைய கரத்தை உயர்த்தி சொல்லக் கூடிய இரட்சிக்கப்படாத நபர் இன்றைக்கு இங்கே இருக்கக்கூடும் என்று வியக்கிறேன். என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறுயாராவது இருக்கிறார்களா? என் சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் பிரான்ஹாம், 'பாவியாகிய என்னை நினைவுகூறும், நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்' என்று சொல்லக்கூடிய வேறு யாராவது இருக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. நான்... விரும்புகிறேன் என்று சொல்லக்கூடிய இன்னும் வேறு யாராவது இருக்கிறார்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, நல்லது. இன்னும் வேறு யாராவது உங்கள் கரங்களை உயர்த்தலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் இந்திய நண்பனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் உங்களுக்கென்று (அமெரிக்க இந்தியர்கள்) ஒதுக்கப்பட்ட இருப்பிடத்திற்கு திரும்பி போகப் போகிறீர்கள். சரி. இன்னும் வேறு யாராவது இப்பொழுது தங்கள் கரங்களை உயர்த்தி, “பாவியாகிய என்னை நினைவு கூறும், சகோதரனே”, என்று கூறுங்கள். தேவன் உங்களைஆசீர்வதிப்பாராக, சகோதரியே. எத்தனை பேர் இங்கு... 95இவ்வளவுதானா? இந்த பீட அழைப்பை நிறத்துவதற்கு முன்னர் இன்னும் ஒரு பாவி இருக்கிறாரா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறு யாராவது உண்டா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறு யாராவது தங்கள் கரங்களை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன்,” என்று கூறுங்கள். தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, தேவன் உங்களோடு கூட இருப்பாராக. என்னே, எப்பேற்பட்ட நேரம் நமக்கு உண்டாயிருக்கிறது. கவனியுங்கள், நண்பர்களே, இவ்வாரத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலின் வல்லமை பிரதியட்சமாகுவதை நீங்கள் பார்ப்பீர்கள். இப்பொழுது வந்து, உங்களுடைய இருதயங்கள் தேவனுடைய அன்போடு பிணைக்கப்பட்டிருக்கும்படி செய்யுங்கள். இந்த பழைய பூமியிலிருந்து உங்களை தூக்கி எடுத்து, அங்கே உன்னதத்திலிருக்கும் மகிமையின் தேசத்திற்கு கொண்டு செல்லக்கூடிய அவருடைய நித்திய ஆசீர்வாதத்தின் வலையில் பிடிக்கப்படும்படிக்கு உங்களை விட்டுக் கொடுங்கள். இங்கே எத்தனை பேர் பரிசுத்த ஆவியின் அபிஷேகமில்லாதவர்களாய் இருக்கிறீர்கள்? அப்படிப்பட்டவர்கள், “சகோதரன் பிரான்ஹாம், எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும். புறஜாதியார் நாட்கள் முடிவுக்கு வருகிறதை நான் உணர்கிறேன்”, என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. ஒ, என்னே, எங்கும் கரங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது. 96பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறாமல் இருக்கும், நண்பனே, நமக்கு அதிக நேரம் விடப்பட்டிருக்கவில்லை என்று நான் அஞ்சுகிறேன். நேரமானது நெருங்கி வந்திருக்கிறது என்று நான் அஞ்சுகிறேன். இப்பொழுது நீங்கள் வந்து இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளக் கூடாதா? இப்பொழுது, இந்த மத்தியான வேளையில் நமக்கு அதிகமான நேரம் இருக்கும் போதே, ஏன் நீங்கள் அப்படி செய்யக் கூடாது? இன்னும் நான்கு மணி கூட ஆகவில்லையே. இங்கே நாம் வரும்படிக்கு அதிகப்படியான நேரம் நமக்கு உண்டாயிருக்கும்போது, ஏன் நீங்கள் வந்து எல்லாரோடுங்கூட சேர்ந்து ஜெபிக்கக்கூடாது? வேறு யாருக்காவது விரோதமாக உங்களிடத்தில் ஏதோ சிறு காரியம் இருக்குமானால் அல்லது ஒரு சிறிய காழ்ப்புணர்ச்சி (malice) உங்கள் இருதயத்தில் இருக்குமானால்; நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், இந்த பீடத்தண்டையில் நிச்சயமாக இப்பொழுது நான் வர இருக்கிறேன். வந்து அவரிடத்தில் நான் மன்னிப்பை கேட்க போகிறேன். ஏனெனில் இந்த கூட்டத்தில் தேவன் அவருடைய ஆசீர்வாதங்களை பொழியப் போகிறார் என்றும், தேவனுடைய மகத்தான காரியங்கள் நிகழப் போவதை நாம் காணப்போகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன்”, என்று கூறுங்கள். இப்பொழுது நம்முடைய தலைகளை நாம் திரும்பவும் தாழ்த்தி இருக்கையில், இன்னும் தொடர்ந்து முன்னுக்கு வாருங்கள், சகோதரியே, அது சரி. அது நல்லது. ஓ, தேவனுடைய கிருபைதாமே... 97இப்பொழுது, தேவனே,உம்முடைய ஆவியானவர் தாமே எங்கள் மீது நிழலிடுவாராக. மேலும் நம்முடைய இருதயங்களில், சர்வவல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தை எண்ணிப் பார்ப்போம். பிதாவே இன்றைக்கு இந்த புருஷர்களும், ஸ்திரீகளும் மற்றும் பையன்களும், பெண்களும் உம்மை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கும் இவர்களுக்கு, நிச்சயமாகவே இப்பொழுது நீர் இவர்களுடன் இருக்கிறீர் என்பதை உம்முடைய வார்த்தையைக் கொண்டு நீர் நிரூபித்திருக்கிறீர். நம்முடைய கர்த்தராகிய, இயேசு “பிதாவானவர் முதலில் ஒருவனை இழுக்காவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்”, என்று கூறியிருக்கிறார். மேலும், தேவனே, அவர்களை நீர் இழுக்கும்படிக்கு உமக்கு ஒரு காரணம் இல்லாத பட்டசத்தில், நீர் அவர்களை இழுக்கமாட்டீர். சிலர் ஆக்கினைத் தீர்ப்புக்கென்றும், வேறு சிலர் நித்திய ஜீவனுக்கென்றும் பிறந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள் இங்கும் அங்கும் சுற்றித் திரிந்து தங்களுடைய நேரத்தை வீணடித்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு, தேவனுடைய கிருபையினிமித்தம், நீர் அவர்களுடைய இருதயத்தை திரும்பவும் தட்டிக் கொண்டிருக்கும்போது, இம்முறை இதை அவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். அன்பான பிதாவே, இந்த ஆசீர்வாதத்தை எங்களுக்கு அளியும். 98இப்பொழுது நம்முடைய தலைகள் தாழ்த்தியிருக்கையில், கரங்களை உயர்த்தினவர்களில் எத்தனை பேர் இங்கே வந்து, சிறிது நேரம் எல்லோருமாக சேர்ந்து ஜெபித்துக் கொள்ளும்படிக்கு, இங்கே இந்த பீடத்தண்டை வந்து நிற்பார்கள் என்று நான் வியக்கிறேன். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் வேறு யாராவது இங்கே வருவீர்களா? சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதித்து, நித்திய ஜீவனை அளிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. அது அருமையாயிருக்கிறது. நல்லது, ஊழியக்கார சகோதரர்களே, ஓ, எவ்வளவு அருமையாயிருக்கிறது‚ அது சரிதானே. தேவனை தேடுகிறவர்களே, இப்பொழுது முன்னுக்கு வாருங்கள். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இரட்சகரே, இரட்சகரே என்னுடைய தாழ்மையான அழுகையை கேட்டருளும்; (சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக) மற்றவர்களை நீர் அழைத்துக் கொண்டிருக்கும்போது, என்னை நீர் கடந்து போகாதேயும். 99இது தாமே இருதயத்தை உடைக்கிறதாயிருக்கிறது. கூடுமானால், தொடர்ந்து மென்மையாக இசையை வாசியுங்கள். இந்த வாலிப புருஷர்களை பாருங்கள், ஸ்பானியர், இந்தியர், இங்கே ஒரு அன்பான வயது சென்ற ஸ்பானிய சகோதரன் வந்திருக்கிறார். மற்றும் தலை கொஞ்சம் வளைந்தும், உடல் முழுவதும் சுற்றப்பட்டும், நரைத்த முடியும் உடைய ஒரு மெக்சிகன் இங்கே வந்திருக்கிறார். ஒரு வேளை உலகம் அவ்வளவாக விரும்புகிற அளவுக்கு அவர் உலகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரோ இப்பொழுது ஒரு தேவ குமாரனாக மாறிக் கொண்டிருக்கிறார். முடமானவரும், அவருடைய கரங்கள் மடிக்கப்பட்டவராய், இங்கே முழங்கால்படியிட்டு, உடைக்கப்பட்டவராய் கிறிஸ்துவண்டை வந்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பாவியும் இங்கே வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகத்திலிருக்கும் இந்த மகத்தான காரியத்துக்கு நாங்கள் உங்களை கெஞ்சும்படிக்கு வைக்க வேண்டாம். இப்பொழுது நீங்கள் வருவீர்களா? அல்லது இன்னும் இங்கே வந்து, முழங்கால் படியிட்டு எங்களோடு ஜெபிக்க வேண்டும் என்று இருக்கிற மற்ற பாவிகள் இருக்கிறீர்களா? கவனியுங்கள், இந்த வயதான மனிதனைப் போன்று இங்கிருக்கும் இந்த ஒவ்வொரு வயதானவர்களும், வருகின்ற இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் மறுபடியும், அவருடைய உதவியினால், வாலிபர்களாக மாற்றப்படுவார்கள் என்பதை இவ்வாரத்தில் நான் உங்களுக்கு தேவனுடைய வார்த்தையை கொண்டு நிரூபிக்கப் போகிறேன். என்னால் அதை தேவனுடைய வார்த்தையை கொண்டு நிரூபிக்க முடியும். 100எப்படியெனில் இந்த மகத்தான உயிர்த்தெழுதலில் வயதானவர் யாவரும் திரும்பவும் அங்கே என்றென்றைக்கும் வாலிபர்களாகி இருப்பார்கள். இப்பொழுது உங்களுக்கு ஏற்படுகிற மரணம், இந்த மரணம் ஒழிந்து போகும். நீங்கள் வாலிபர்களாகவோ அல்லது வாலிப ஸ்திரீகளாகவோ இருந்தபோது பெற்றிருந்த அதே ஜீவனையுடையவர்களாக திரும்பவும் உயிர்த்தெழுதலில் பெற்றுக் கொள்வீர்கள். ஓ, அந்த சிறு குழந்தைகளை இழந்துபோன நீங்கள், ஒருவேளை அது பிரசவகாலத்திற்கு முன்னதாகவோ அல்லது எதுவானாலும், அவர்கள் மறுபடியும் அந்த உயிர்த்தெழுதலில் வருவார்கள். இயேசு சீக்கிரம் வருகிறார். அதற்கு ஆயத்தப்படவும், வெகு சீக்கிரத்தில் நிகழப்போகிற இந்த மகத்தான நிகழ்ச்சியை சந்திக்க ஆயத்தப்படும்படிக்கு இப்பொழுது நீங்கள் வரமாட்டீர்களா? இப்பொழுது நீங்கள் வருவீர்களா? தனிப்பட்ட உதவியாளர்கள் இங்கு சுற்றும் முற்றும் நடக்கையில், இப்பொழுது அவர்களால் கூடுமானால், இங்கு பீடத்தை சுற்றி இந்த மக்களுடன்... இப்பொழுது நாம் பாடலை பாடிக் கொண்டிருக்கையில், இன்னும் ஒரு பாவி வரலாமே. இப்பொழுது இங்கே வாருங்கள். இரட்சகரே, இரட்சகரே ஓ, என்னுடைய தாழ்மையான அழுகையை கேட்டருளும்; ஆம், மற்றவர்களை நீர் அழைத்துக் கொண்டிருக்கும்போது, என்னை கடந்து போகாதேயும். 101பாவியாகிய நண்பனே, இங்கே வந்து, தொலைந்து போனவர்களோடு கூட முழங்கால் படியிட மாட்டாயோ பரிசுத்த ஆவியை தேடுகிறவர்களே, இங்கே வந்து இவர்களோடு கூடமுழங்கால் படியிடுவீர்களா? நீங்கள் வர மாட்டீர்களா? இப்பொழுது உண்மையிலேயே நீங்கள் இங்கே வரவேண்டும் என்று நாங்கள் விருப்பப்படுகிறோம். அப்பொழுது உங்களுக்கு தேவனிடத்தில் தயை கிடைக்கும். இதுதான் கூட்டத்தை துவங்கக் கூடிய சரியான வழியாய் இருக்கிறது. என்னுடைய அவிசுவாசம் நீங்க எனக்குஉதவிடும் ஓ, இரட்சகரே... ...தாழ்மையான ஜெபத்தை, மற்றவர்களை நீர் அழைத்துக் கொண்டிருக்கும்போது, என்னை விட்டு கடந்து போகாதேயும். 102நல்லது, சுற்றியிருக்கும் ஒவ்வொருவரும் அமைதியாக இருக்கவும். (பரிசுத்த ஆவியை) தேடுகிறவர்களிடத்தில் இங்கிருக்கும் தனிப்பட்ட உதவியாளர்கள் சென்று, அவர்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது இங்கு வரும்படிக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கு அன்பான ஒருவர் இங்கிருப்பார்களானால் மற்றும் அவரோடு கூட முழங்கால்படியிட்டு ஜெபிக்க வேண்டும் என்று இருப்பவர், தொடர்ந்து முன்னுக்கு வாருங்கள். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தேடுகிற உங்களுக்கு, இன்னும் அடுத்த சில நிமிடங்களில் சரியாக என்ன நடக்கும் என்று கூறுவதென்பது கடினமாயிருக்கும். இப்பொழுது, இரட்சிக்கப்படுவதற்கு ஏதுவான சூழ்நிலையை உண்டாக்குவோமாக. இப்பொழுது மக்கள் ஒவ்வொருவரும் இங்கிருக்கையில், பாவிகளாகிய நீங்கள் இரட்சிப்புக்காக கதறி அழுது கொண்டிருக்கையில், ஒரு மனிதன் இன்னொருவருக்கு வேதத்திலிருந்து படித்து காட்டிக் கொண்டிருக்கிறார். அருமையான சகோதர, சகோதரிகள் மற்றவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு இங்கே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இயேசு, “என்னிடத்தில் வருகிறவனை, ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை”, என்று வாக்குறைத்திருக்கிறார். நீங்கள் இப்பொழுது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொண்டு, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாய் இருக்கப்போகிறீர்கள். 103அங்கே வெளியில் இருக்கும் எத்தனைப் பேர் இந்த ஆத்துமாக்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி, இப்பொழுது நாம் தலைகளை தாழ்த்துவோம். தனிப்பட்ட உதவியாளர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும், இப்பொழுது அங்கிருக்கும் மக்களிடத்தில் சென்று அவர்களை அணுகுங்கள். இப்பொழுது, ஒவ்வொருவரும் பயபக்தியுடன் இருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு புதிய பிறப்பை கொடுக்கும் மட்டும் இந்த கட்டிடத்தை விட்டும், உங்கள் இடத்தை விட்டும் கடந்து போகாதிருங்கள். நல்லது. சகோதரன் பல்லர்டு (Ballard) நாங்கள் இங்கே நின்றுகொண்டிருக்கையில் நீர் வந்து எங்களை ஜெபத்தில் வழிநடத்தும்.